News June 18, 2024
மதுரை: இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக உள் மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் மதுரையில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Similar News
News April 3, 2026
BIG BREAKING மதுரை: பாஜக வேட்பாளர் அறிவிப்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை அடுத்ததடுத்து வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில், மதுரை தெற்கு தொகுதி NDA கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், மதுரை தெற்கில் பாஜக சார்பில் ராமஸ்ரீனிவாசன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 3, 2026
மதுரை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

மதுரை மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000449, 9445000450, 8870678220) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News April 3, 2026
மதுரை: மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு விரும்புகின்றனர் – செல்லூர் ராஜு

மதுரை வடக்கு தொகுதியில் நேற்று தே.ஜ கூட்டணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு விரும்புகிறார்கள் எனவே மதுரையில் 10 தொகுதியில் நாம் அமோக வெற்றி பெறுவோம் என்றார். டாக்டர் சரவணன் கூறியதாவது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்னும் ஒரே மாதத்தில் அதிமுக ஆட்சி மலர போகிறது. அதிமுக தேர்தல் அறிக்கை மணக் கும் மல்லிகையாக உள்ளது என்றார்.


