News September 8, 2025
ஹாலிவுட்டில் கலக்கப் போகும் ‘மதராஸி’ வில்லன்..!

‘துப்பாக்கி’, ‘பில்லா 2’, ‘அஞ்சான்’, ‘மதராஸி’ உள்ளிட்ட படங்களில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய வித்யுத் ஜாம்வால் அடுத்ததாக ஹாலிவுட்டில் களமிறங்குகிறார். ‘STREET FIGHTER’ படத்தில் அவர் ‘தால்சிம்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதை பாரமவுண்ட் பிக்சர்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. அடுத்தாண்டு அக்டோபர் 16-ம் தேதி படம் ரிலீசாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது நடிப்பு யாருக்கெல்லாம் பிடிக்கும்?
Similar News
News September 8, 2025
மிஷ்கினால் கண்கலங்கிய பெற்றோர்

மாணவியின் கல்விச் செலவை ஏற்ற இயக்குநர் மிஷ்கினுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தனியார் டிவி நிகழ்ச்சியில் நடுவராக உள்ள மிஷ்கின், அதில் போட்டியாளரான திஷாதனாவின் நான்கரை ஆண்டு கல்விச் செலவை ஏற்பதாக அறிவித்தார். மேலும் திஷாதனாவிடம் அப்பாவை கஷ்டப்படுத்த வேண்டாம் எனவும் தானே மாஸ்டர்ஸ் படிப்பதற்கான பணத்தை கட்டுவதாகவும் உறுதியளித்தார். இதை கேட்ட திஷாதனாவின் பெற்றோர்கள் கண் கலங்கினர்.
News September 8, 2025
சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்

*அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு. *உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. *உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது. *நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு. *சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.
News September 8, 2025
துணை ஜனாதிபதி தேர்தல்: இன்று மாதிரி வாக்குப்பதிவு

துணை ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் மாதிரி வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. மதியம் 2.30 மணி அளவில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்த மாதிரி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் எம்.பி.க்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் உள்ளிட்ட நடைமுறைகள் எடுத்துரைக்கப்படும். தேர்தலில் NDA சார்பில் சிபி ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன ரெட்டியும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.