News April 14, 2025
செப்.5இல் வருகிறான் ‘மதராஸி’

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் SK நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மதராஸி’. பக்கா ஆக்ஷன் கமர்ஷியலாக உருவாகி வரும் இப்படத்தில் முக்கியமான சமூக பிரச்னையை முருகதாஸ் பேசியிருக்கிறார். மேலும், இப்படத்தினை செப்.5-ம் தேதி வெளியிடும் வகையில் பணிகளை முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இசை மற்றும் வெளிநாட்டு உரிமை விற்பனையான நிலையில் ஓடிடி உரிமையினை விற்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News April 15, 2025
வக்ஃப் சட்டத்திற்கு எதிரான விஜய்யின் மனு ஏற்பு

வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. வக்ஃப் சட்டத்தில் கொண்டு வந்துள்ள திருத்தங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அதனை ரத்து செய்யக் கோரி விஜய் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு உள்பட வழக்கு தொடர்பான 10 மனுக்கள் நாளை விசாரணைக்காக பட்டியலிடப்படும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
News April 15, 2025
பங்குச்சந்தைகள் கிடுகிடுவென உயர்வு

இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஜெட் வேகத்தில் உயர்ந்ததால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வர்த்தக நேர முடிவில், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி இன்று 500 புள்ளிகள் உயர்ந்து 23,328 புள்ளிகளை தொட்டது. சென்செக்ஸ் 1,577 புள்ளிகள் உயர்ந்து 76,734 புள்ளிகளை கடந்தது. சர்வதேச சந்தைகள் அனைத்தும் உயர்ந்திருப்பது இந்திய சந்தைகளுக்கும் சாதகமாக மாறியிருக்கிறது.
News April 15, 2025
இளையராஜா செய்வது சரியா? தவறா?

அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் GBU படத்தில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியிருப்பதாக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவரது படைப்புக்கு அவர் உரிமை கோருகிறார், இதில் என்ன தவறிருக்கிறது என்று ஒரு தரப்பினரும், அவரது பாடல்கள் பொதுவானவைதானே, அதுக்கெல்லாமா பணம் கேட்பது என்று ஒரு தரப்பினரும் கமெண்ட் செய்து வருகின்றனர். உங்களது கருத்து என்னவென்று கமெண்ட்டில் சொல்லுங்க.