News April 24, 2025
‘மெட்ராஸ் யூனிவர்சிட்டி’ விண்ணப்பம் தொடங்கியது!

மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் 2025-2026 கல்வியாண்டில் முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பம் தொடங்கியுள்ளது. விண்ணப்பக் கட்டணம் ₹354-ஐ ஆன்லைன் வழியாகச் செலுத்தலாம். மேலும், யூனிவர்சிட்டியில் வழங்கப்படும் படிப்புகள், கட்டண விவரங்கள் ஆகியவற்றை தெரிந்துகொள்ள <
Similar News
News September 12, 2025
பெரியாரை கற்றதால் திமுகவுக்கு ஆதரவு: திருமா

விசிகவை திமுக மெல்ல மெல்ல விழுங்கி விடும் என்று EPS சமீபத்தில் கூறியிருந்தார். இதனையடுத்து, திமுகவுடன் தான் ஏன் கூட்டணி வைத்தேன் என திருமா தொடர்ந்து விளக்கம் கொடுத்து வருகிறார். அந்த வகையில், பெரியாரை பயின்றதால் திமுகவை ஆதரிப்பதாக திருமா தெரிவித்துள்ளார். மேலும், 2 சீட்டுகளுக்காக திமுகவுடன் கூட்டணி வைத்தேன் என்று சொல்பவர்களால், அந்த சீட்டை கூட வாங்க முடியவில்லை என்றும் காட்டமாக கூறியுள்ளார்.
News September 12, 2025
Cinema Roundup: ‘காந்தா’ ரிலீஸ் ஒத்திவைப்பு

* ‘இட்லி கடை’ படத்தில் கயல் என்ற கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடித்துள்ளார். * இந்த வாரம் ரிலீசாக வேண்டிய துல்கர் சல்மானின் ‘காந்தா’ திடீரென தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. * கவினின் ‘கிஸ்’ படத்தில் இருந்து 3வது பாடல் வெளியாகியுள்ளது. * LCU படமான பென்ஸில் சம்யுக்தா மேனன் நடிக்கிறார். * லோகேஷ் கனகராஜ் – அமீர் கான் இணைந்து பணியாற்றவிருந்த சூப்பர்ஹீரோ படம் கைவிடப்பட்டதாக தகவல்.
News September 12, 2025
BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

USA டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 36 காசுகள் சரிந்து, இதுவரை இல்லாத வகையில் 88.47 ஆக குறைந்துள்ளது. இந்தியா – அமெரிக்கா இடையேயான வரி பிரச்னை மற்றும் டாலரை வலுப்படுத்த அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகளால் இந்த வீழ்ச்சி கண்டிருப்பதாகவும், இதனால் ஏற்றுமதி துறை கடும் பாதிப்பை சந்திக்கும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக பல லட்சம் கோடி நஷ்டம் ஏற்படும்.