News August 6, 2025
ED-க்கு ₹30,000 அபராதம் விதித்த சென்னை ஐகோர்ட்

திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் ED-க்கு ₹30,000 அபராதமாக சென்னை ஐகோர்ட் விதித்துள்ளது. பதில் மனு தாக்கல் செய்யாததால் ஐகோர்ட் நீதிபதியின் நிவாரண நிதிக்கு அபராதத்தை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ED சோதனையை எதிர்த்து திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 9, 2026
தமிழக தேர்தல்: வங்கிகளின் கெடுபிடியால் மக்கள் அவதி!

TN தேர்தல் தேதி ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் புதிய கட்டுப்பாடுகளை வங்கிகள் விதித்துள்ளன. வங்கிகளின் பிரதிநிதிகளாக உள்ள BC-க்கு(Business Correspondent) வழங்கப்படும் தொகை குறைக்கப்பட்டுள்ளது. BC-க்கு நாளொன்றுக்கு ₹1,00,000, தனி நபருக்கு ₹5,000 மட்டுமே வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக கிராமப்புற மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
News March 9, 2026
விஜய் போட்டியிடும் தொகுதி இறுதியானது

தவெக <<19333933>>வேட்பாளர்கள் <<>>பட்டியல் இறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளிலும் விஜய் போட்டியிட உள்ளதாகவும், தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், ஸ்ரீரங்கத்தில் கு.ப.கிருஷ்ணன், கரூரில் மதியழகன், கோபியில் செங்கோட்டையன், வில்லிவாக்கத்தில் ஆதவ், மயிலாப்பூரில் வெங்கட்ராமன், எழும்பூரில் ராஜ்மோகன், அம்பத்தூரில் ஜே.சி.டி பிரபாகர் களம் காண இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News March 9, 2026
பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுமா? அமைச்சர் விளக்கம்

கச்சா எண்ணெய் இருப்பு தொடர்பாக மத்திய அரசு விழிப்புடன் இருப்பதாக ராஜ்யசபாவில் ஜெய்சங்கர் தெரிவித்தார். மேற்காசிய போர் குறித்து பேசிய அவர், போரை PM மோடி உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், டெஹ்ரானில் உள்ள தூதரகம் இந்தியர்களை பாதுகாக்க முழுமையாக செயல்பட்டு வருவதாகவும் மேற்காசிய நாடுகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என இந்தியா விரும்புவதாகவும் அவர் கூறினார்.


