News March 16, 2025
‘பைத்தியக்காரத்தனம்’… தோனி பற்றி பேசிய கோலி!

தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது, துணை கேப்டனாக செயல்பட்டது குறித்து விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார். ஃபீல்டிங் செட்டப் உள்ளிட்ட ஆட்ட வியூகங்களை பகிர்ந்தால், எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, இது என்ன பைத்தியக்காரத்தனம் போல் உள்ளது என தோனி ரியாக்ஷன் கொடுப்பார் என்று அவர் ஜாலியாக கூறியுள்ளார். தோனியிடம் நிறைய கற்றுக் கொண்டதாகவும் கோலி தெரிவித்தார்.
Similar News
News July 5, 2025
20 பாடல்களைக் கொண்ட ‘பறந்து போ’

ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பறந்து போ’. இயக்குநரின் மாறுபட்ட திரைக்கதையால் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, இப்படத்தில் 20 பாடல்கள் (Tracks) உள்ளன. கதை சூழலுக்கு ஏற்ப பாடல் வரிகளும் ரசிக்கும்படி உள்ளதாம். இதன் பாடல் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி. இவர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பல படங்களில் உதவியாளராக பணியாற்றியுள்ளாராம்.
News July 5, 2025
ரிதன்யா மரணம் வெறும் தற்கொலை அல்ல: சீமான்

இனி வாழவே முடியாத நிலைக்கு அவரை தள்ளி, தற்கொலை செய்ய வைத்த திட்டமிட்ட படுகொலை இது. இந்த நூற்றாண்டிலும் வரதட்சணை கொடுமையால் பெண்கள் உயிரிழப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என ரிதன்யா தற்கொலை குறித்து பேசியுள்ளார் நாதகவின் சீமான். அரசியல் அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு காரணமான கணவர், மாமனார், மாமியார் மீது எளிதில் ஜாமினில் வெளிவரும் வகையில் வழக்கு பதிவு செய்துள்ளனர் என சீமான் சாடியுள்ளார்.
News July 5, 2025
எடுத்த காரியத்தில் வெற்றி பெற…

எந்த விஷயத்திலும் வெற்றி பெற, அனுமனின் அனுக்கிரகம் வேண்டும். சனிக்கிழமை மட்டுமின்றி, தினமும் 21 முறை இந்த அனுமன் ஸ்லோகத்தை சொல்லி வாருங்கள்.
ஸ்ரீராம தூத மஹாதீர
ருத்ர வீர்ய ஸமத் பவ
ஆஞ்சநேய கர்ப்ப ஸம்பூத
வாயு புத்திர நமோஸ்துதே.
அர்த்தம்: ‘ராமனின் தூதனாகிய, மிகுந்த வீரமுள்ள, ருத்ரனின் சக்தியுடன் பிறந்த, ஆஞ்சநேயரே, வாயு புத்திரனே, உமக்கு வணக்கம்.