News August 5, 2024
விபத்தில் மதிமுக நிர்வாகிகள் பலி

மதுரை அருகே லாரி மீது கார் மோதியதில், மதிமுக நிர்வாகிகள் மூவர் பலியாகினர். சென்னையில் நேற்று நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று திரும்பியபோது நிகழ்ந்த விபத்தில், மாநில தொண்டரணி அமைப்பாளர் பச்சைமுத்து, அமல்ராஜ், புலி சேகர் ஆகியோர் பலியாகினர். இதனிடையே, மூவர் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக மதிமுக எம்.பி., துரை வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 18, 2026
இன்னும் எத்தனை நாளைக்கு ஜன நாயகன்? வானதி

ஜன நாயகன் பட விவகாரத்தில் விசாரணை நடந்துவரும் நிலையில், இடையில் புகுந்து யாரும் ஒன்றும் செய்ய முடியாது என பாஜக MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும், இன்னும் எத்தனை நாளைக்கு இப்படம் பற்றி பேசிக்கொண்டிருப்பது என்ற அவர், விஜய் கட்சி தொடங்கியிருப்பதால் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெறுவதாகவும், இது மாதிரி எத்தனையோ படங்கள் சென்சாரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.
News January 18, 2026
தொடக்கமே இந்திய அணிக்கு அதிர்ச்சி

3-வது ODI-ல் இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே நியூசிலாந்து பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. நியூசிலாந்து நிர்ணயித்த <<18890751>>338 ரன்கள் இலக்கை<<>> நோக்கி தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மாவும்(11), சுப்மன் கில்லும்(23) அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். ஆனால் சேஸ் மாஸ்டர் விராட் கோலி களத்தில் இருப்பதால் இந்தியா சரிவில் இருந்து மீண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி – 56/2
News January 18, 2026
ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்

புதிதாக விண்ணப்பித்தவர்களில் 50 ஆயிரம் பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். அத்துடன், மீதமுள்ள விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், புதிதாகவும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, அருகில் நடக்கும் அரசு குறைதீர் முகாம்களில் தேவையான ஆவணங்களைக் கொண்டு விண்ணப்பிக்கலாம்.


