News November 15, 2024
சர்வதேச திரைப்பட விழாவில் மாதவன் நடித்த படம்

55ஆவது சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், மாதவன் புதிதாக நடித்துள்ள “ஹிஸாப் பராபர்” என்ற படமும் திரையிடப்பட உள்ளது. இதுகுறித்து பேசிய அவர், ”இந்தப் படம் ஊழலுக்கு எதிரான போராட்டம் மட்டும் அல்ல. நீதி என்பது எளிதாக கிடைத்துவிடாது என்பதை புரிந்துகொள்ள வைக்கும்” என்றார். நவ.26 மாலை 5:45க்கு ‘ஹிஸாப் பராபர்’ படம் ஒளிபரப்பப்படுகிறது.
Similar News
News March 1, 2026
நாளை தொடங்குகிறது அரசு பள்ளி மாணவர் சேர்க்கை

தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நாளை முதல் அடுத்தாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. அதற்கேற்ப பள்ளிகளில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு HM-களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 1, 2026
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு அதிக முதலீடு: PM மோடி

மதுரையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் ₹4,400 கோடிக்கும் அதிகமான திட்டங்களை PM மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர்,
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக முதலீடு செய்துள்ளதாக கூறியுள்ளார். குறிப்பாக, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ₹880 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் பாஜக அரசு அதைவிட 9 மடங்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
News March 1, 2026
தேர்தல் அறிக்கை எப்போது முதல்முறையாக வந்தது?

1931-ல் கராச்சி காங்., மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்களை, 1937 தேர்தலில் காங்., தேர்தல் அறிக்கை வடிவில் முதல்முறையாக கொண்டுவந்தது. 1957 பேரவை தேர்தலின்போது ‘திராவிட நாடு’ என்ற தனிநாடு கோரிக்கையை தமிழக அரசியலில் முதல் தேர்தல் அறிக்கையாக திமுக முன்வைத்தது. 1967 தேர்தலில் தேர்தல் அறிக்கை (திமுக) முழு வடிவம் பெற்றது. அடுத்தடுத்து அதிமுக, பாமக கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கின.


