News October 2, 2025

சூர்யா உடன் மோதும் ‘மதகஜராஜா’ காம்போ

image

சூர்யாவின் ‘கருப்பு’ படம் 2026 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதேநாளில், விஷால் நடிப்பில் சுந்தர் C இயக்கும் படத்தையும் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாம். தற்போது ‘மூக்குத்தி அம்மன் 2’ பட வேலைகளில் பிஸியாக இருக்கும் சுந்தர் C, விஷால் படத்தை மூன்றே மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளாராம். வரும் நவம்பரில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாம்.

Similar News

News October 2, 2025

செல்போன் ரீசார்ஜ்.. மக்களுக்கு அதிர்ச்சி

image

இந்தாண்டு இறுதியில் ரீசார்ஜ் கட்டணங்களை 10 முதல் 12% வரை உயர்த்த டெலிகாம் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, குறைந்தபட்ச டேட்டா + கால் திட்டங்களை ₹249-ல் இருந்து ₹299-ஆக ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் உயர்த்தின. இந்தநிலையில், மீண்டும் நிறுவனங்கள் கட்டண உயர்வை அறிவித்தால், குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டங்களின் விலை ₹40 வரை உயர வாய்ப்புள்ளது.

News October 2, 2025

இறந்த மனைவி உயிருடன் வந்த ஆச்சரியம்

image

உ.பி.,யில் வரதட்சனை கொடுமையால் கொல்லப்பட்டதாக கருதப்பட்ட பெண்ணை, 2 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 2023-ல் அப்பெண் மாயமாகியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால், வரதட்சணை கேட்டு கணவர் கொன்றுவிட்டதாக, பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர். இதில் கணவர் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், ம.பி.,யில் அப்பெண்ணை போலீசார் கண்டுபிடித்து, தலைமறைவானதற்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

News October 2, 2025

அட்டகாசமான போஸ்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் PHOTOS

image

காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்திய ஐஸ்வர்யா ராஜேஷ், தனது போஸ்களின் மூலமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் பதிவிட்ட போட்டோஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தனது அட்டகாசமான போஸ்களால், ரசிகர்களை அசர வைத்துள்ளார். மேலே போட்டோஸ் உள்ளன. பிடித்திருந்தா லைக் போடுங்க.

error: Content is protected !!