News February 24, 2025
‘மடல்’ டைட்டில் லுக் போஸ்டர் வெளியீடு

‘மடல்’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹரிசங்கர் ரவீந்திரன் இயக்கும் இப்படத்தில் சிலநேரங்களில் சில மனிதர்கள், அன்பிற்கினியாள், போன்ற படங்களில் நடித்த பிரவீன் ராஜா கதாநாயகனாக நடிக்கிறார். நிழல்கள் ரவி, பாலசரவணன், விவேக் பிரசன்னா, கிருஷ்ண தயாள் ஆகியோருடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இன்று நடந்த படத்தின் பூஜையில் நடிகர் மணிகண்டன் கலந்துகொண்டார்.
Similar News
News February 24, 2025
ரேஷன் கடைகளுக்கு சென்று E-KYC செக் பண்ணுங்க

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் AAY, PHH வகை ரேஷன் அட்டைதாரர்கள் மார்ச் 31ஆம் தேதிக்குள் E-KYC செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தங்களது குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்கள், புதிதாக யாருக்கேனும் ஆதார் எடுக்கப்பட்டிருந்தால் அவர்களது விபரங்களை சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு சென்று அப்டேட் செய்ய வேண்டும். KYC சரிபார்ப்பு செய்யாவிட்டால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது.
News February 24, 2025
திமுக அரசுக்கு தகுதி இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

TNக்கு பல திட்டங்களை வழங்கிய பிரதமர் மோடியை வரவேண்டாம் என்று சொல்ல திமுக அரசுக்கு தகுதியில்லை என பொன்.ராதாகிருஷ்ணன் சாடியுள்ளார். திமுகவில் அமைச்சர் முதல் கவுன்சிலர் வரை CBSE பள்ளிகளை திறந்து ஹிந்தி கற்றுக் கொடுப்பதாகவும், அனைத்து CBSE பள்ளிகளை மூட தமிழக அரசு ஆணையிடுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தனியார் பள்ளிகளால் அரசு பள்ளிகள் குறைந்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News February 24, 2025
3 மாநிலங்களில் மாவோயிஸ்ட் வேட்டை: என்ஐஏ அதிரடி

கேரளாவின் எடக்கரை வனப்பகுதியில் கடந்த 2017ல் ஆயுதப் பயிற்சி பெற்ற மாவோயிஸ்ட்களில், 3 பேரை என்ஐஏ அடுத்தடுத்து கைது செய்தது. அவர்களில் மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர் ராகவேந்திராவிடம் விசாரணை நடத்தியதில் தமிழகம், கேரளா, கர்நாடகாவில் மேலும் சிலர் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. எனவே 3 மாநிலங்களிலும் போலீசாருடன் இணைந்து என்ஐஏ தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.