News April 2, 2025

மா சே துங் பொன்மொழிகள்

image

*மரம் அமைதியைத்தான் விரும்புகிறது. ஆனால் காற்று அதை அனுமதிப்பதில்லை. *போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். *புரட்சி என்பது இலகுவாகவும் மென்மையாகவும் இருக்கமுடியாது. * துப்பாக்கியைக் கொண்டே உலகம் முழுவதையும் திருத்தி அமைக்கலாம். போரைக் கொண்டே போரை ஒழிக்க முடியும், துப்பாக்கியை ஒழிக்க வேண்டுமானால் முதலில் அதனை நம் கைகளில் பிடிக்க வேண்டும்.

Similar News

News November 15, 2025

பிஹார் தோல்வி: ராகுல் காந்தி, கார்கே ஆலோசனை

image

பிஹார் சட்டமன்ற தேர்தலில் காங்., கட்சி மிகவும் மோசமான தோல்வியை தழுவிய நிலையில், ராகுல் காந்தி, கார்கே மற்றும் காங்.,-ன் முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் பேசிய காங். பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், பிஹார் தேர்தல் முடிவை தங்களால் மட்டுமல்ல, பிஹார் மக்களாலேயே நம்ப முடியவில்லை என்று குறிப்பிட்டார். தேர்தல் ஆணையம் ஒருசார்பாக செயல்பட்டதாக கூறிய அவர், ஆதாரங்களை திரட்டி வெளியிடுவோம் என்றார்.

News November 15, 2025

பள்ளி மாணவி மரணம்.. நெஞ்சை உலுக்கிய கொடுமை

image

குழந்தைகள் தினத்தில் பள்ளிக் குழந்தைகளை ஆசிரியர்கள் கூடுதலாக கவனிப்பார்கள். ஆனால், மகாராஷ்டிராவில் நடந்ததே வேறு. நேற்று(நவ.14) பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக சென்ற 6-ம் வகுப்பு மாணவி காஜலை, 100 முறை தோப்புக் கரணம் போடச் சொல்லி பனிஷ்மெண்ட் கொடுத்துள்ளனர். ஸ்கூல் பேக்குடன் தோப்புக் கரணம் போட்ட அந்த மாணவி, வீடு திரும்பியதும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். இத்தகைய பள்ளிகளை என்ன செய்வது?

News November 15, 2025

காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வந்தவன் நான்: சீமான்

image

காமராஜர் மறைவுக்குப்பின் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் அழிந்துவிட்டதாக சீமான் விமர்சித்துள்ளார். மேலும் ஈழத்தின் கனவை அழித்த காங்கிரஸை ஒழிக்கவே, தான் அரசியல் களத்திற்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். காங்., திராவிட கட்சிகளின் தோளில் பயணிப்பதாகவும் தன்னைப் போல தனியாக 234 தொகுதியிலும் அவர்களால் தனித்து போட்டியிட முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!