News June 14, 2024
மா.பொ.சி படத்தின் பெயர் மாற்றம்

போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்துள்ள படத்தின் பெயர் “சார்” என மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தப் படத்திற்கு மா.பொ.சி (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) எனப் பெயரிடப்பட்டு இருந்தது. இதற்கு, மா.பொ.சி-யின் பேத்தி கண்டனம் தெரிவித்ததுடன், பெயர் வைக்க அனுமதி பெறவில்லை எனக் குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையானதால், “சார்” என பெயர் மாற்றம் செய்துள்ளதாக போஸ் வெங்கட் கூறியுள்ளார்.
Similar News
News March 1, 2026
காங்கிரஸ் தொகுதிகளில் கைவைக்கும் திமுக?

காங்கிரஸுக்கு 2021-ஐ விட தற்போது குறைந்த தொகுதிகளை ஒதுக்க திமுக திட்டமிடுவதாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் இருந்தே 41 தொகுதிகளை காங்., கேட்டுவருகிறது. ஆனால், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை குறைத்து கொடுக்கும் முடிவில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இம்முறை காங்கிரஸுக்கு 23 தொகுதிகளே கிடைக்கும் என்கின்றனர். இந்நிலையில், காங்கிரஸை திமுக பழிவாங்குகிறதா என கதர் சட்டைகள் கொதிக்கின்றனர்.
News March 1, 2026
முருகனிடம் வேண்டிய போது வருத்தமாக இருந்தது: PM

தமிழக மக்களின் நலனுக்காக திருப்பரங்குன்றம் முருகனிடம் வேண்டிக்கொண்டதாக PM மோடி கூறியுள்ளார். இந்த தரிசனம் ஆன்மிக நிறைவை தந்தபோதும், மனம் வருத்தமடைந்தது என்று பேசிய அவர், திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றக்கோரி தற்கொலை செய்துகொண்ட பூரணசந்திரனை நினைத்து வருந்தினேன் என கூறியுள்ளார். மேலும், திமுக அரசின் மனிதநேயமற்ற தன்மையே இதற்கு காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
News March 1, 2026
210 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியமைப்போம்: EPS

வரும் தேர்தலில் 210 தொகுதிகளில் NDA கூட்டணி வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும் என EPS தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் ஹாஸ்பிடல் பணி உள்பட பல திட்டங்களை DMK அரசு முடக்கப் பார்ப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு TN-க்கு எதுவும் செய்யவில்லை என ஸ்டாலின் அவதூறு பரப்புவதாகவும், மத்தியில் காங்., ஆட்சியில் திமுக அங்கம் வகித்தபோது TN-க்கு என்ன செய்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


