News November 17, 2024
மா.சுப்பிரமணியம் பதவி விலக வேண்டும்: பாஜக ஆவேசம்

அமைச்சர் பதவியிலிருந்து மா.சுப்பிரமணியன் விலக வேண்டுமென பாஜக வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் தமிழ் மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், சென்னை ஹாஸ்பிடலில் டாக்டர் கத்தியால் குத்தப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். ஹாஸ்பிடல்களில் வசதிகளை மேம்படுத்தாமல், நிர்வாகத்தை சீரமைக்காமல் டாக்டர்கள், பொது மக்களை ஆபத்தில் சிக்க விடும் வகையில் மா.சு. செயல்படுவதாகவும் சாடியுள்ளார்.
Similar News
News March 10, 2026
ஐரோப்பிய நாடுகளுக்கு உதவத் தயார்: ரஷ்யா

போர் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில், ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்க தயாராக இருப்பதாக புடின் அறிவித்துள்ளார். அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் நீண்டகால ஒத்துழைப்பை வழங்கினால் எண்ணெய் அனுப்புவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான தடைகளை நீக்க அமெரிக்கா பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
News March 10, 2026
கேஸ் புக்கிங் செய்ய இனி 25 நாள்கள் காத்திருக்கணும்

நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பதுக்கல் & கள்ளச்சந்தையை தடுக்க, 2 சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையே 25 நாள்கள் இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு Commercial கேஸ் சப்ளையில் முன்னுரிமை அளிக்கவும், ஹோட்டல்கள், பிற தொழிற்சாலைகளுக்கான சப்ளையை மதிப்பாய்வு செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
News March 10, 2026
BREAKING: செந்தில் பாலாஜி பரபரப்பு அறிவிப்பு

கரூர் வழக்கு தொடர்பாக வரும் 17-ம் தேதி CBI அலுவலகத்தில் ஆஜராக உள்ளதாக செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அப்போது, CBI எழுப்பும் கேள்விகளுக்கு தான் உரிய விளக்கத்தை அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று, CBI அனுப்பிய சம்மனை அவர் ஏற்க மறுத்ததால், E-மெயில் மூலமாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தனது X பக்கத்தில் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.


