News April 27, 2025
எம்.சாண்ட் விலை ₹1000 குறைகிறது

கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் M-சாண்ட், P-சாண்ட் ஆகியவற்றின் விலையை குறைத்து விற்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. கல் குவாரி, க்ரஷர், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரின் கூட்டம் இன்று காலை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடத்தப்பட்டது. அப்போது, M-சாண்ட் விலையை மெட்ரிக் டன்னுக்கு ₹1000 குறைத்து விற்க விற்பனையாளர்கள் ஒப்புக்கொண்டனர். இதனால், கட்டுமானப் பணிகள் விறுவிறுப்படையும்.
Similar News
News January 22, 2026
ஜன நாயகன் ரிலீஸில் அடுத்த சிக்கல்

சென்சார் சிக்கலில் உள்ள ‘ஜன நாயகன்’ படத்தை முன்னதாகவே அமேசான் பிரைம் வாங்கியிருந்தது. ஆனால், பட ரிலீஸ் தேதி முடிவாகாததால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு அமேசான் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் விஜய் தரப்பு அடுத்தடுத்து சிக்கலை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
News January 22, 2026
மோடியை நண்பர் என குறிப்பிட்டு எச்சரித்த டிரம்ப்

PM மோடியை மதிப்பதாகவும், விரைவில் இந்தியா – அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் சாதகமான ஒப்பந்தத்தை எட்டும் என டிரம்ப் கூறியுள்ளார். ரஷ்ய எண்ணெய் கொள்முதல் காரணமாக ஏற்கெனவே இந்திய ஏற்றுமதிகள் மீது அவர் 50% வரி விதித்துள்ளார். இந்நிலையில் PM மோடியை தனது நண்பர் என கூறியதுடன், நாங்கள் வரிகளை உயர்த்தினால், அது இந்தியாவுக்கு மிகவும் மோசமாக இருக்கும் எனவும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
News January 22, 2026
விஜய் பாஜகவை குற்றம்சாட்டினாரா? H ராஜா

‘ஜன நாயகன்’ படத்தின் பிரச்னைக்கு மத்திய அரசு காரணம் இல்லை என H ராஜா தெரிவித்துள்ளார். மேலும் ‘ஜன நாயகன்’ வெளியாகாததற்கு பாஜகதான் காரணம் என விஜய் சொன்னாரா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். கோர்ட்டுக்கு பதில் சென்சார் போர்டிலேயே ‘ஜன நாயகன்’ படக்குழு முறையிட்டிருந்தால் இவ்வளவு தாமதம் ஏற்பட்டிருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


