News April 27, 2025
எம்.சாண்ட் விலை ₹1000 குறைகிறது

கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் M-சாண்ட், P-சாண்ட் ஆகியவற்றின் விலையை குறைத்து விற்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. கல் குவாரி, க்ரஷர், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரின் கூட்டம் இன்று காலை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடத்தப்பட்டது. அப்போது, M-சாண்ட் விலையை மெட்ரிக் டன்னுக்கு ₹1000 குறைத்து விற்க விற்பனையாளர்கள் ஒப்புக்கொண்டனர். இதனால், கட்டுமானப் பணிகள் விறுவிறுப்படையும்.
Similar News
News October 23, 2025
ஆஸி., க்கு எதிராக மாபெரும் சாதனை படைத்த Hitman!

ஒருபுறம் விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோர் சொதப்பிய நிலையில், நம்பிக்கை தரும் வகையில் ரோஹித் சர்மா விளையாடி வருகிறார். ODI பார்மெட்டில் ஆஸி., அணிக்கு எதிராக 1000 ரன்களை கடந்த ஒரே வீரர் என்ற சாதனையை இன்று ரோஹித் படைத்துள்ளார். இந்த பட்டியலில் 2-வது இடத்தில் விராட் கோலி 802 ரன்களுடன் உள்ளார். ரோஹித் 73 ரன்களில் அவுட்டான போதும், இந்திய அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுத்தார்.
News October 23, 2025
திமுக தலைவர்களின் பதவி பறிப்பு

ஒரே நாளில் திமுகவை சேர்ந்த நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவரின் பதவி பறிக்கப்பட்ட சம்பவம் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. திட்டக்குடி நகராட்சி தலைவர் வெண்ணிலா தனது சொந்த கட்சி கவுன்சிலர்களாலேயே தோற்கடிக்கப்பட்டு பதவியை இழந்தார். அதேபோல், சொத்து வரி சர்ச்சையில் சிக்கிய ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகச் செயல் அலுவலர் வெங்கடகோபு அறிவித்துள்ளார்.
News October 23, 2025
ஷ்ரேயஸ் ஐயர் FIFTY!

இந்திய அணி வீரர் ஷ்ரேயஸ் 67 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். தொடக்கத்திலேயே கில் & கோலி ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி. பின்னர் ரோஹித்தும், ஷ்ரேயஸும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து நம்பிக்கையூட்டினர். இந்திய அணி தற்போது வரை 28.2 ஓவர்களில் 130/2 ரன்களை எடுத்துள்ளது.