News March 1, 2025
மு.க.ஸ்டாலின் என்னும் திராவிட நாயகன்!

முதல்வரும், தி.மு.கவின் தலைவருமான மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் இன்று. கருணாநிதியின் மகன் என்ற மிகப்பெரிய சகாப்தத்தை தாங்கி பிடிக்கும் கடமையோடு அரசியல் களம் புகுந்து இவர் மத்திய அரசை கடுமையாக எதிர்த்து வருகிறார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ₹1000, பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம், மக்களை தேடி மருத்துவம் என அவரின் திட்டங்களின் பட்டியல் நீளம். இவரால் நீங்கள் அடைந்த பயனை கமெண்ட் பண்ணுங்க?
Similar News
News March 12, 2026
அரசு தேர்வு எழுத வந்த நாய்.. வைரல் PHOTO!

பிஹார் நீதிமன்ற பியூன் வேலைக்காக ராகேஷ் குமார், 2022-ல் விண்ணப்பித்துள்ளார். 4 வருட காத்திருப்பிற்கு பிறகு அவருக்கு வந்த ஹால்டிக்கெட்டில், அவரின் போட்டோவிற்கு பதிலாக நாயின் போட்டோ இடம்பெற்றிருந்தது. தேர்வு தேதி நெருங்கி வரும் சூழலில், இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என ராகேஷ் வருத்தம் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் அலட்சியத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
News March 12, 2026
கேஸ் சிலிண்டர்.. நாடு முழுவதும் புதிய உத்தரவு

கேஸ் சிலிண்டர் பதுக்கல், கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும், சிலிண்டர் விநியோக சூழல் குறித்து காவல்துறை மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் இருந்து தலைமைச் செயலர் அறிக்கை பெற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இருப்பதாக வதந்தி பரவுவதை தடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 12, 2026
தோனி மீதான புகார் தள்ளுபடி

IPL-ல் வீரராக விளையாடும் நிலையில் கிரிக்கெட் அகாடமியையும் நடத்துவதால் BCCI விதிகளை மீறியதாக தோனி மீது 2024-ல் ஒருவர் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த BCCI எதிக்ஸ் அதிகாரி நீதிபதி அருண் மிஸ்ரா, அகாடமியில் தோனி நிர்வாக அல்லது முடிவெடுக்கும் அதிகாரம் பயன்படுத்தியதற்கான ஆதாரம் இல்லை என்று புகாரை தள்ளுபடி செய்துள்ளார். மேலும், அவர் BCCI விதிகளை மீறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


