News September 14, 2024
இன்று சென்னை திரும்புகிறார் மு.க.ஸ்டாலின்

USA பயணத்தை நிறைவு செய்த முதல்வர் ஸ்டாலின் இன்று தமிழகம் திரும்புகிறார். 17 நாள் பயணமாக கடந்த 27ஆம் தேதி USA சென்ற அவர், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் ₹7,616 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். மேலும், அங்குள்ள தமிழர்களை சந்தித்து உரையாடினார். பயணத்தை நிறைவு செய்த அவர் நேற்று காலை அங்கிருந்து புறப்பட்ட நிலையில், இன்று காலை 8.45 மணிக்கு அவர் சென்னை வருகிறார்.
Similar News
News December 9, 2025
கில்லர் லுக்கில் மிருணாள் தாக்கூர்

மிருணாள் தாக்கூர், இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள், ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இதில் அவர், கருப்பு நிற உடை, மின்னும் காதணிகள், பிரகாசமான முகம், வசீகரமான பார்வை என மொத்தமாக ரசிகர்களை ஈர்க்கிறார். மிருணாளின் கில்லர் லுக் ஸ்டைலிஷ் போட்டோக்கள், உங்களுக்கும் பிடிச்சிருந்த ஒரு லைக் போடுங்க.
News December 9, 2025
இந்திய அணியில் தமிழக வீராங்கனை

இலங்கை அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான அணியில் ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட 15 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக 17 வயதான TN வீராங்கனை ஜி.கமலினியும் அணிக்கு தேர்வாகியுள்ளார். இவர் ஏற்கெனவே WPL-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 9, 2025
சளி மற்றும் இருமலுக்கு வீட்டு வைத்தியம்

மழை மற்றும் குளிர்காலங்களில் சளி, இருமல் பாதிப்பு பெரும்பாலனவர்களுக்கு வரும். இதற்கு மருத்துவரை அணுகி மருந்து எடுத்துக்கொள்வது சிறந்தது. இருப்பினும், சளி மற்றும் இருமலில் இருந்து உடலுக்கு புத்துணர்வு அளிக்க சில எளிய விஷயங்களை வீட்டிலேயே செய்யலாம். அவை என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


