News April 7, 2025

ஆண் குழந்தைக்கு அப்பா ஆனார் பாடலாசிரியர் விவேக்!

image

சினிமா பாடலாசிரியர் விவேக் – சாரதா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவர்களுக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 2015-ம் ஆண்டு திருமணம் செய்த அவர், 10-வது ஆண்டு திருமண நாளையொட்டி குழந்தை பிறந்திருப்பதை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். எனக்குள் ஒருவன் திரைப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான அவர், ‘ஆளப்போறான் தமிழன்’ உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.

Similar News

News December 4, 2025

ராசி பலன்கள் (04.12.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News December 4, 2025

இந்துக்களின் பண்பாட்டு உரிமையை பறிப்பதா? நயினார்

image

திருப்பரங்குன்ற தீபத்தூணில் தீபம் ஏற்ற விடாமல் தடுத்ததோடு, முருக பக்தர்கள் மீது வெறித்தனமாக திமுக அரசு தாக்கியுள்ளதாக நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்துக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தி, பண்பாட்டு உரிமையை பறிக்கும் கொடூர ஆசையில் இப்படி செய்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், முருகப்பெருமானின் ஆசியோடு திமுக விரைவில் தமிழக மக்களால் துரத்தியடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

News December 3, 2025

கார்த்திகை மகா தீபம் PHOTOS

image

தமிழகத்தில் இன்று கார்த்திகை மகா தீபம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மகா தீபம் போன்று, தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் மகா தீபம் ஏற்பட்டது. எங்கெல்லாம் மகா தீபம் ஏற்பட்டது என்று, உங்களுக்காக மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!