News May 13, 2024
நுரையீரல் சளியை எளிதாக வெளியேற்றலாம்

*ஒரு ஸ்பூன் வெந்தயத்துடன் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி, சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு குடித்து வந்தால், நுரையீரலில் உள்ள சளி கரைந்து வெளியேறும். *தினமும் மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலம் நுரையீரல் சளி கரைந்து வெளியேற வாய்ப்பு உள்ளது. *சளி வெளியேற கொதிக்கும் நீரில் ஆவி பிடிக்கலாம். *கொதிக்கும் நீரில் உப்பு கலந்து, வெதுவெதுப்பாக இருக்கும்போது வாயில் ஊற்றி கொப்பளிக்க நுரையீரலில் உள்ள சளி குறையும்.
Similar News
News February 20, 2026
தேமுதிக கேட்டு வாங்கிய MP சீட் இவருக்குதானா?

திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள தேமுதிக, 1 ராஜ்யசபா MP சீட்டும், 10 தொகுதிகளையும் ஓகே செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. வரும் தேர்தலில், விருத்தாசலம் அல்லது ரிஷிவந்தியம் தொகுதியில் பிரேமலதா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 1 MP சீட் விஜய பிரபாகரனுக்கு வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
News February 20, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹640 குறைந்தது

தங்கம் விலை நேற்று உயர்ந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. 1 கிராம் ₹80 குறைந்து ₹14,420-க்கும், 1 சவரனுக்கு ₹640 குறைந்து ₹1,15,360-க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹2,160 உயர்ந்த நிலையில், இன்று ₹640 குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்க வைத்துள்ளது. அதேநேரம், தங்க நகை முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
News February 20, 2026
பொறுமையா போறேன்.. பயந்து அல்ல: மாணிக்கம் தாகூர்

தன்னை குறித்த கேள்விக்கு, காங்கிரஸின் <<19189207>>கதர் சட்டைகள் கிழிக்கப்பட்டிருப்பதாக வைகோ <<>>பேசியதற்கு மாணிக்கம் தாகூர் தனது X பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். ’கூட்டணி குறித்து பேசக் கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை சொன்ன ஒத்த வார்த்தைக்கு மரியாதை கொடுத்து இதை தாண்டி பொறுமையுடன் கடந்த போறேன், பயந்துகிட்டு இல்ல அண்ணன் வைகோ’ என கூறியுள்ளார். இதையடுத்து திமுக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


