News September 5, 2025
சந்திர கிரகணம்.. 5 ராசியினருக்கு எச்சரிக்கை

நாளை மறுநாள்(செப்.7) நிகழும் சந்திர கிரகணத்தால் 5 ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். *ரிஷபம்: உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவு. *மிதுனம்: குடும்ப வாழ்க்கையில் நிம்மதி குறையும். *சிம்மம்: தொழில் பார்ட்னருடன் பிரச்னை வரலாம். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். *துலாம்: நிதிநிலை வீழ்ச்சி அடையும். சேமிப்பு குறையும். *கும்பம்: எதிர்பாராத செலவு, விபத்து ஏற்படலாம்.
Similar News
News September 5, 2025
திமுக, அதிமுகவுக்கு எதிராக விஜய் போடும் மெகா பிளான்

திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு எதிராக முழுவீச்சில் களமாடத் தயாராகி வருகிறார் விஜய். செப்.13-ல் முதல் மக்கள் சந்திப்பை தொடங்க திட்டமிட்டுள்ள அவர், மெகா பிளான் போட்டு வைத்துள்ளாராம். முதல்கட்டமாக 100 தொகுதிகளுக்கு சென்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. விவசாயிகள், பெண்கள், தொழிலதிபர்களை சந்தித்து குறைகளை கேட்டறியவும் அவர் ஏற்பாடு செய்து வருகிறார். விஜய்யின் வியூகம் எடுபடுமா?
News September 5, 2025
சாம்பியன்களுக்கு வந்த சோதனை.. அடி மேல் அடி

2019 உலக கோப்பை சாம்பியன்களான இங்கிலாந்து தொடர் தோல்விகளால் நெருக்கடியில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இங்கிலாந்து 22 ODI போட்டிகளில் விளையாடி 7-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக விளையாடிய 6 ODI தொடர்களில் 5 தொடர்களை இழந்திருக்கிறது. ஐசிசி தரவரிசையில் 8வது இடத்திற்கு சறுக்கியதால், 2027 உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழக்கலாம். BazBall அணுகுமுறையை இங்கிலாந்து கைவிடணுமா?
News September 5, 2025
Parenting: பெற்றோர்களே இந்த தவறுகளை செய்கிறீர்களா?

குழந்தைகளை வளர்ப்பதில் சில தவறுகளை செய்வதால் அவர்கள் பார்வையில் பெற்றோர் வில்லனாக மாறிவிடுகிறார்கள். இதனை தடுக்க, பெற்றோர் சில விஷயங்களை செய்யாமல் இருப்பது நல்லது. ➤ஒரு பிள்ளைக்கு மட்டும் அதிகம் செல்லம் கொடுக்காதீர்கள் ➤எதிர்த்து பேசும் குழந்தைகளை அடக்க வேண்டாம் ➤அவர்கள் செய்யும் தவறுகளை தண்டோரா போடாதீர்கள் ➤13 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுங்கள். SHARE.


