News April 19, 2024
லக்னோ அணிக்கு 177 ரன்கள் இலக்கு

லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 176/6 ரன்கள் எடுத்துள்ளது. ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து வந்த சிஎஸ்கே அணியில் ஜடேஜா மட்டுமே பொறுமையாக ஆடி 57* ரன்கள் சேர்த்தார். ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசிய மொயீன் அலி 30, ரஹானே 36, தோனி 28* ரன்கள் எடுத்தனர். LSG சார்பில் க்ருனால் பாண்டியா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
Similar News
News January 20, 2026
PM மோடி மீதும் வழக்கு: ராமதாஸ் தரப்பு

பாமகவின் பெயர், சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை கோரி சென்னை HC-ல் ராமதாஸ் தரப்பில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி பேசிய ராமதாஸ் தரப்பு வக்கீல், ஜன.23-ல் TN வரும் PM மோடி, கூட்டணி குறித்து அன்புமணியிடம் பேசினால் அவர் மீதும் வழக்கு தொடர்வோம் எனக் கூறினார். மேலும், அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி அமைத்தது சட்டவிரோதம் என்ற அவர், பாமகவின் தலைவர் ராமதாஸ் மட்டுமே எனக் கூறினார்.
News January 20, 2026
தங்கம், வெள்ளி.. ஒரே நாளில் விலை ₹22,000 மாறியது

<<18907207>>தங்கம் விலை<<>> மளமளவென உயர்ந்துவரும் சூழலில், வெள்ளி விலை ராக்கெட் வேகத்தில் எகிறுகிறது. அந்த வகையில், இன்று ஒரேநாளில் வெள்ளி விலை ₹22,000 அதிகரித்துள்ளது. தற்போது 1 கிராம் வெள்ளி ₹340-க்கும், 1 கிலோ வெள்ளி ₹3.40 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இம்மாதத்தில் (ஜனவரி) 20 நாள்களில் மட்டும் 1 கிலோ வெள்ளி ₹84,000 அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News January 20, 2026
தமிழக காங்கிரஸில் விரிசலா?

TN காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம், தமிழக பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 91 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 30 பேர் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சியில் பங்கு என தொடர்ந்து குரல் எழுப்பிய MP மாணிக்கம் தாகூரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால், TN காங்கிரஸில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது.


