News April 5, 2025
மும்பையை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி…!

மும்பை அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி. முதலில் பேட்டிங் செய்த அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 203 ரன்கள் குவித்தது. மார்ச்(60), மார்க்ரம் (53) ஆகியோர் அரைசதம் அடித்திருந்தனர். இதனை அடுத்து களமிறங்கிய மும்பை அணி இறுதிவரை போராடியும் வெற்றி பெற முடியவில்லை. மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட் வீழ்த்தியும் பயனில்லை.
Similar News
News November 4, 2025
BREAKING: பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ் பாண்டியன்

இன்று காலையில் திமுகவில் இணைந்த OPS ஆதரவாளர் மனோஜ் பாண்டியன், தனது MLA பதவியை ராஜினாமா செய்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார். 2021-ல் அதிமுக சார்பில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு மனோஜ் பாண்டியன் வெற்றி பெற்றிருந்தார்.
News November 4, 2025
கனமழை வெளுக்கப் போகுது… வந்தது அலர்ட்

தமிழகத்தில் 3 நாள்களுக்கு <<18195152>>கனமழைக்கான மஞ்சள் அலர்ட்<<>> கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது, திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை, சென்னை, திருவள்ளூர், திருவாரூர், கோவை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. ஆகையால், பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் முடிந்து வீடு திரும்புவோர் கவனமாக இருங்க!
News November 4, 2025
முருகனை தரிசித்த ‘ஜனநாயகன்’ இயக்குநர்

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ மீது எதிர்பார்ப்புகள் ஏராளம். இந்த படம் வரும் ஜன.9-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், படத்தின் இயக்குநர் H.வினோத், இயக்குநர் ரா.சரவணனுடன் இணைந்து பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். என்ன வேண்டிக் கொண்டிருப்பார் H.வினோத்? கமெண்ட்டில் சொல்லுங்கள்.


