News April 2, 2024
LSGvsRCB: இன்றைய போட்டியில் கே.எல்.ராகுல் இல்லை

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று RCB vs LSG அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது. முன்னதாக, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராகுலுக்கு பதிலாக நிகோலஸ் பூரன் கேப்டன் பொறுப்பு வகித்தார். இதனிடையே, KKRக்கு எதிரான போட்டியில் தங்கள் சொந்த மைதானத்தில் தோல்வியடைந்த RCB, இன்றைய போட்டியில் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News October 31, 2025
உலகக்கோப்பையை வென்றதா இந்திய மகளிர் அணி?

Women’s WC-ல் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதாக SM-ல் தவறான தகவல் பரவுகிறது. நவ.2-ம் தேதி ஃபைனல் நடக்கவுள்ள நிலையில், விக்கிபீடியாவில் சிலர் எடிட் ஆப்ஷனை பயன்படுத்தி இந்தியா முதலில் பேட்டிங் செய்து 326 ரன்கள் குவித்ததாக குறிப்பிட்டுள்ளனர். இலக்கை துரத்திய SA அணி 285 ரன்கள் மட்டுமே எடுத்ததாக, பதிவிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். இறுதிப்போட்டியில் யார் ஜெயிப்பாங்க?
News October 31, 2025
செங்கோட்டையனை நீக்க இதுவே காரணம்!

கழகத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் செங்கோட்டையன் செயல்பட்டதாக கூறி அவரை அதிமுகவில் இருந்து EPS நீக்கியுள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைக்கக்கூடாது என தெரிந்தும், செங்கோட்டையன் அவர்களுடன் ஒன்றிணைந்து கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு உண்டாக்கியதாக EPS தெரிவித்துள்ளார். முன்னதாக, அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியும் செங்கோட்டையனிடம் இருந்து பறிக்கப்பட்டது.
News October 31, 2025
அட்டகாசம் ரீ-ரிலீஸ்.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி

‘அட்டகாசம்’ ரீ-ரிலீஸை கொண்டாடி தீர்க்க காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இன்று ரீ-ரிலீஸிற்கு திட்டமிடப்பட்டிருந்த ‘அட்டகாசம்’ படத்தின் Qube வெர்ஷனை தியேட்டர்களுக்கு வழங்க விநியோகஸ்தர் தரப்பு தவறியதாக கூறப்படுகிறது. பல தியேட்டர்களில் ‘அட்டகாசம்’ ரீ-ரிலீஸின் முன்பதிவு ஹவுஸ்ஃபுல் ஆன நிலையில், விநியோகஸ்தரின் தவறால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.


