News April 3, 2024
ஐபிஎல் தொடரில் இருந்து LSG வீரர் விலகல்

காயம் காரணமாக லக்னோ அணி வீரர் ஷிவம் மாவி, எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நீங்கள் காயத்தில் இருந்து விரைவில் மீண்டு வருவீர்கள் என LSG அணி அவருக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும் இவருக்கு மாற்று வீரரை LSG இதுவரை அறிவிக்கவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் LSG அணி ஷிவம் மாவியை ரூ.6.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 9, 2026
முதலில் நிலவுக்கு போறோம்.. பிளானை மாற்றிய எலான் மஸ்க்

செவ்வாய் இல்லை முதலில் நிலவுப் பயணம் என தனது விண்வெளி பிளானை எலான் மஸ்க் மாற்றியுள்ளார். 2027-க்குள் SpaceX நிறுவனம் ஆளில்லா விண்கலத்தை நிலவில் தரையிறக்க உள்ளதாவும், அடுத்த 10 ஆண்டுகளில் நிலவில் ஒரு நகரத்தை உருவாக்க உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், செவ்வாய்க்கு செல்வதற்கு முன்பு நிலவுப் பயணங்களில் கவனம் செலுத்துவோம் என்று தனது திட்டத்தை மஸ்க் வெளியிட்டுள்ளார்.
News February 9, 2026
கடன் வட்டி தள்ளுபடி.. அறிவித்தது தமிழக அரசு

வீட்டு வசதி வாரியத்தில் மலிவு விலையில் வீடு வாங்கிய பலரும் தவணை கட்டத் தவறியதால் அபராத வட்டியுடன் சேர்ந்து கடன் சுமை அதிகரித்துள்ளது. அவர்களுக்கான அபராத வட்டியை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது 2015 மார்ச் 31-க்கு முன்னர் தவணை காலம் முடிவடைந்த வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், இந்த சலுகை வரும் மார்ச் 31 வரை அமலில் இருக்கும். உடனே முந்துங்கள் நண்பர்களே!
News February 9, 2026
வேக்போஸ்டிங் டிரெண்ட் பற்றி தெரியுமா?

சமீபத்தில் SM-ல், இது என்ன? இதில் சொல்ல வருகின்றனர்? போன்ற அர்த்தமற்ற பதிவுகளை அதிகம் பார்க்கிறீர்களா? இதை வேக்போஸ்டிங் (Vagueposting) என்று அழைக்கின்றனர். இது தற்போதைய இளம் தலைமுறையினரிடையே ட்ரெண்டாக உள்ளது. மற்றவர்களின் ஆர்வம் மற்றும் எதிர்வினைகளைத் தூண்டும் நோக்கத்துடன் பதிவிடுவதை சிலர் புத்திசாலியான கவன ஈர்ப்பு உத்தி என பாராட்டினாலும், பலர் அர்த்தமற்றது என விமர்சிக்கின்றனர்.


