News April 8, 2025
LSG முதலில் பேட்டிங்

ஐபிஎல் தொடரில் இன்று மதியம் ஒன்று, மாலை ஒன்று என இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. கொல்கத்தா – லக்னோ இடையே நடைபெறவிருக்கும் மதியப் போட்டியில் கொல்கத்தா கேப்டன் ரஹானே டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.
Similar News
News August 31, 2025
ஆசிய கோப்பை : இந்திய அணி வெற்றி

பிஹாரில் நடக்கும் ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்திய அணி 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான் மோதின. 4வது நிமிடத்தில் மந்தீப் சிங், 5வது மற்றும் 46வது நிமிடங்களில் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தனர். ஜப்பான் அணி 2 கோல் அடித்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. குரூப் ஏ-வில் முதலிடத்தில் உள்ள இந்தியா அடுத்ததாக கஜகஸ்தானை எதிர்கொள்கிறது.
News August 31, 2025
நாளை முதல் மது பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம்.. அரசு அறிவிப்பு

TASMAC கடைகளில் மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமலுக்கு வருகிறது. அதன்படி, பாட்டிலுக்கு ₹10 கூடுதலாக பெற்று, பாட்டிலை திருப்பி தரும்போது ₹10 ஒப்படைக்கப்படும். நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கெனவே இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இந்த திட்டம் சிவகங்கை, மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த திட்டம் பற்றி உங்கள் கருத்தென்ன?
News August 31, 2025
பிரிக்ஸ் நாடுகளை மிரட்டிய டிரம்ப்.. புடின் எடுத்த முடிவு

பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சியை தடுக்க அமெரிக்கா பாரபட்சமாக செயல்படுவதாக புடின் விமர்சித்துள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் பொதுவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% வரிவிதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். ரஷ்யா, சீனா, இந்தியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ளன.