News March 28, 2025
எல்பிஜி லாரி வேலை நிறுத்தம்: பேச்சுவார்த்தை தோல்வி

தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. பழைய முறையில் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News October 14, 2025
மா விவசாயிகளின் நலனுக்காக PM மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

மாம்பழ விவசாயிகள் நலனுக்காக PM மோடிக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மாம்பழ ஏற்றுமதி மற்றும் மதிப்புக் கூட்டு பொருள்களின் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளார். 2025-ல் பதப்படுத்தக் கூடிய மாம்பழ வகைகளை பயிரிட்ட விவசாயிகள், கொள்முதல் விலை வீழ்ச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News October 14, 2025
INTERNATIONAL ROUNDUP: நேருக்கு நேர் மோதிய ரயில்கள்

*மெக்சிகோ வெள்ளப்பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64-ஆக உயர்வு
*ஸ்லோவாக்கியாவில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் காயம்
*அமெரிக்காவில் அதிகரிக்கும் தட்டம்மை பாதிப்பு
*உலகளாவிய எரிசக்தி மாற்றத்தில் இந்தியாவின் பங்களிப்பைப் பாராட்டிய மங்கோலிய அதிபர்
*பிரேசில் முன்னாள் அதிபருக்கு வீட்டுக் காவல்
News October 14, 2025
BREAKING: பள்ளிகளுக்கு பறந்தது முக்கிய உத்தரவு

RTE சட்டத்தின் கீழ் 25% ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பயிலும் மாணவர்களின் விவரங்களை வழங்குவதற்கான காலக்கெடுவை ஐகோர்ட் நீட்டித்துள்ளது. அக்.31-க்குள் முழு விவரங்களையும் சமர்ப்பிக்க அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக எந்த மாணவர் சேர்க்கையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விவரங்கள் கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.