News December 30, 2025
LPG கேஸ்: இதை செய்யலன்னா பெரிய RISK!

LPG சிலிண்டரை பாதுகாப்பாக வைத்து பயன்படுத்த சில வழிகள் உள்ளன. ➤சிலிண்டரை சாய்த்து வைக்க வேண்டாம் ➤காற்றோட்டமான இடத்தில் வையுங்கள் ➤வெப்பம் அதிகமாக உள்ள இடத்திலோ, மின்சாதனங்களுக்கு அருகிலோ வைக்க வேண்டாம் ➤சமைக்கும்போது நைலான் & பாலியஸ்டர் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை அணிய வேண்டாம் ➤சிலிண்டரை அடுப்போடு இணைக்கும் ரப்பர் குழாயை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றவேண்டும். SHARE.
Similar News
News January 5, 2026
அமித்ஷாவை EPS சந்திக்காதது ஏன்? தமிழிசை விளக்கம்

TN வந்த அமித்ஷாவை, EPS சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிமுக சார்பாக <<18768017>>வேலுமணியே<<>> 2 முறை சந்தித்து பேசினார். இதுபற்றி பேட்டியளித்த தமிழிசை, புதுக்கோட்டையில் நடந்தது NDA கூட்டம் அல்ல என்று தெரிவித்தார், மேலும், அமித்ஷாவை EPS சந்திக்கும் திட்டமே இல்லையே என்று கூறிய அவர், EPS-க்கு பதிலாகவே வேலுமணி சந்தித்தாகவும், அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது என்றும் குறிப்பிட்டார்.
News January 5, 2026
தடைகளை உடைத்து கல்வியை வழங்கும் அரசு: விஜய் சேதுபதி

ஒரு தலைமுறை அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்றால், கல்வி மிக முக்கியம் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழாவில் பேசிய அவர், தமிழக அரசு தடைகளை உடைத்து, ஒரு தலைமுறைக்கான கல்வியை வழங்கி, முன்னோக்கி நகர்த்தி வருவதாக குறிப்பிட்டார். இந்த பணியை அரசு நீண்ட காலமாக செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
News January 5, 2026
பிரபல நடிகர் அப்பச்சன் காலமானார்

பழம்பெரும் நடிகர் புன்னப்ரா அப்பச்சன்(77), ஆலப்புழாவில் இன்று காலமானார். 70-களில் மலையாள சினிமாவிற்கு அடியெடுத்து வைத்த அவர், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ‘சுறா’ படத்தில் அவர் நடித்திருந்தார். அப்பச்சன் மறைவுக்கு, திரைப்பிரபலங்கள் பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP


