News August 10, 2024
மலைப்பகுதிகளில் மழை குறைவு: நீர்வரத்து சரிவு

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 116.60 அடியாகவும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 69.86 அடியாகவும் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 122.37 அடியாகவும் உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 317 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, அணையில் இருந்து 1155 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு வரும் நீர்வரத்தானது இன்று சரிந்துள்ளது.
Similar News
News November 25, 2025
நெல்லை: தெரியாத நம்பர்-ல இருந்து போன் வருதா??

நெல்லை மக்களே உங்க போனுக்கு தேவை இல்லாத லோன், கிரெடிட் கார்டு வேண்டுமா, இடம் விற்பனைன்னு போன் வருதா? இதை மத்திய அரசின் TRAI DND 3.0(Do Not Disturb) என்ற செயலியின் மூலம் தடுக்கலாம். இங்கு <
News November 25, 2025
நெல்லை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

நெல்லை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 25, 2025
நெல்லை: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ் (22). இவர் நேற்று மதியம் தனது வீட்டின் அருகில் ஈரத் துணியுடன் அருந்து விழுந்த மின்வயரை பார்த்து, அதனை யாரேனும் தொட்டுவிடக்கூடாது என்று அப்புறப்படுத்தியுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்துள்ளார். தகவலறிந்த திசையன்விளை போலீசார் தனுஷின் உடலை மீட்டு நெல்லை G.H-க்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


