News February 16, 2025

84 ஆண்டுகளாக.. இணை பிரியாத காதலர்கள்!

image

உறவுகள் கண் மூடி திறப்பதற்குள் காணாமல் போகும் தலைமுறையில் இருந்து இவர்களை பார்க்கும்போது பொறாமையாக கூட இருக்கலாம். பிரேசிலை சேர்ந்த மனொயில் ஏஞ்சலிம் டினோ, மரியா டிசோசா தம்பதி 84 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 13 பிள்ளைகள், 55 பேரர்கள், 54 கொள்ளு பேரர்கள், 12 கொள்ளு கொள்ளு பேரர்கள். எப்படி ஒன்றாக இருக்க முடிகிறது என்கிற கேள்விக்கு அவர்களின் ஒரே பதில்: காதல்!

Similar News

News September 12, 2025

ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு அதிர்ச்சி

image

மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்தியா சீனாவிடம் தோல்வியை தழுவியது. Hangzhou-ல் நடந்த சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில், சீனா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. 4வது, 31வது, 47வது, 56வது நிமிடங்களில் அந்த அணி வீராங்கனைகள் கோல் அடித்தனர். இந்திய அணி ஒரு கோல் மட்டுமே அடிக்க 4-1 என்ற கணக்கில் சீனா வெற்றியடைந்தது. இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற வேண்டுமானால் நாளை ஜப்பான் அணியை வீழ்த்தி ஆக வேண்டும்.

News September 12, 2025

கவிஞர் கண்ணதாசன் பொன்மொழிகள்

image

*அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது. எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பதே. *அதிர்ஷ்டத்தின் மூலம் அறிவைப் பெற முடியாது, அறிவின் மூலம் அதிர்ஷ்டத்தை பெறலாம். *எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எவ்விதம் முடியும்? இதுதான் பாதை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. *ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம். அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்.

News September 12, 2025

பிரதமருக்கு குங்குமம் அனுப்ப முடிவு: உத்தவ் சிவசேனா

image

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவதை ஏற்க முடியாது என உத்தவ் சிவசேனா தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் இன்றும் நடைமுறையில் உள்ள நிலையில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது துரோகம் என உத்தவ் சிவசேனா கூறியுள்ளது. போட்டி நடக்கும் நாளில் ‘சிந்தூர் ரக்சா’ என்ற பெயரில் போராட்டம் நடத்த போவதாகவும், அதில் பங்கேற்கும் பெண்கள் PM-க்கு குங்குமம் அனுப்ப உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!