News August 25, 2025

காதலர்களே… இனி கவலை வேண்டாம்.. இது உங்களுக்காக

image

தமிழகம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம் என CPM மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் சாதி மறுப்பு திருமணங்களுக்காக தனிப்பட்ட ஏற்பாடுகள் இல்லை என சாடிய அவர், காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் அலுவலகங்கள் 24 மணிநேரமும் திறந்தே இருக்கும் என்றார். சாதி ஆணவக்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறு கூறியுள்ளார்.

Similar News

News August 25, 2025

பேனாவுல எழுதுனா இவ்வளவு நன்மை இருக்கு..!

image

கடைசியா எப்போ பேனாவுல எழுதுனீங்க? இந்த கேள்வி இப்போ எதுக்குன்னு உங்களுக்கு தோணலாம். இப்படி கேட்க காரணம் இருக்கு. எல்லாமே டிஜிட்டல் மயமா ஆகிட்டதுனால பேனாவுல எழுதுறத நம்ம மறந்துட்டோம் என்றும் இதனால் கற்றல் அறிவு குறஞ்சிட்டதா நிபுணர்கள் சொல்றாங்க. பேனாவுல எழுதுறது நம்ம அறிவாற்றல கூட்டுறதோட மட்டுமில்லாம பார்கின்சன் நோயைக் கண்டறியவும் உதவுதாம். அதனால, திரும்பவும் பேனாவுல எழுத தொடங்குங்க.

News August 25, 2025

தமிழக மூத்த தலைவர் கவலைக்கிடம்.. HEALTH UPDATE

image

CPI மூத்த தலைவர் <<17516027>>நல்லகண்ணு<<>> உயிருக்கு ஆபத்தான நிலையில், ஹாஸ்பிடலில் உள்ளார். இந்நிலையில், அவரை நேரில் சந்தித்த பிறகு பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நல்லகண்ணுவின் நுரையீரலில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும், Dr.சாந்தாராம் தலைமையிலான குழு சிகிச்சை அளித்து அந்த அடைப்பை நீக்கியுள்ளதாகவும் கூறினார். மேலும், நாளை CT ஸ்கேன் பரிசோதனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News August 25, 2025

மருத்துவமனையில் மூத்த தலைவர்.. பரபரப்பு அறிக்கை

image

ஹாஸ்பிடலில் உள்ள நல்லகண்ணுவை சந்திக்க யாரும் நேரில் வர வேண்டாம் என முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த 22-ம் தேதி வீட்டில் தவறி விழுந்த மூத்த தலைவர் நல்லகண்ணு(100), தற்போது ராஜீவ் காந்தி GH-ல் சிகிச்சையில் உள்ளார். திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் அவரை நேரில் சந்தித்தனர். இதனிடையே, ICU-வில் தொடர் சிகிச்சையில் இருக்கும் அவரை, டாக்டர்கள், குடும்பத்தினர் கவனித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!