News January 31, 2025

சொந்த தங்கை மீதே காதல்: அடுத்து நடந்த கொடூரம்!

image

கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஹரிகுமார் தனது சொந்த தங்கையான ஸ்ரீதுவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். தங்கைக்கு திருமணம் முடிந்து, 2 வயதில் குழந்தை இருந்தபோதும் கூட தனது அருவருப்பான எண்ணத்தை அவன் விடவில்லை. இந்நிலையில், தனக்கு இடையூறாக இருந்த தனது தங்கையின் 2 வயது குழந்தையை கிணற்றில் வீசி கொன்றுள்ளான் இந்தக் கொடூரன். தற்போது போலீஸ் அவனை கைது செய்துள்ளது. இப்படியும் ஒரு பிறவியா?

Similar News

News April 8, 2026

பாஜகவின் கட்டளைகளை EC நிறைவேற்றுகிறது: ஸ்டாலின்

image

தமிழகத்தின் தலைமை செயலாளர், IPS அதிகாரிகள் மாற்றத்திற்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நியாயமான முறையில் தேர்தலை நடத்துவதற்கு பதிலாக பாஜகவின் கட்டளைகளை EC நிறைவேற்றி வருவதாக தனது X பதிவில் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது அதிகார அத்துமீறல், ஆணவத்தின் உச்சக்கட்டம் என குறிப்பிட்டுள்ள அவர், எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் தமிழகத்தில் NDA கூட்டணி மண்ணைக் கவ்வுவது உறுதி எனவும் கூறியுள்ளார்.

News April 8, 2026

நடிகை சுபாஷினி மரணம்.. கணவர் கண்ணீர்

image

கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில் சீரியல் நடிகை <<19578782>>சுபாஷினி தற்கொலை<<>> செய்து கொண்டது சின்னத்திரை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், சுபாஷினி குறித்து அவரது கணவர் பிபின் சந்திரா உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், ‘பேபி உன்னை போல் என்னை யாரும் காதலித்தது இல்லை. என் நினைவில், எனக்குள் நீ எப்போதும் வாழ்கிறாய். நீ உயிருடன் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

News April 8, 2026

BREAKING: பரப்புரையில் விபத்து.. விஜய் அதிர்ச்சி

image

விஜய்யின் இன்றைய நெல்லை பரப்புரையில் இன்று மட்டும் 5 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து நெல்லை வரை விஜய்யின் பரப்புரை வாகனத்தை, தொண்டர்கள் பைக்கில் பின்தொடர்ந்தபோது மட்டும் 4 விபத்துகள் அரங்கேறியுள்ளன. இதில் அரசுப்பேருந்து மோதி படுகாயமடைந்த இளைஞர் உள்பட 16 பேர் சிகிச்சைக்காக ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர் விபத்துகள் நடப்பது விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!