News March 27, 2024
தோனி மீதான காதல் எதையும் தாண்டி புனிதமானது

குணா படத்தின் பாடலை மேற்கோள் காட்டி தோனியை கவிதை நடையில் ஹர்பஜன் சிங் புகழ்ந்துள்ளார். இது தொடர்பாக X-இல் பதிவிட்ட அவர், “தமிழ்நாட்டு மக்களை “மஞ்சள் மேல்” பாய்சாக மாற்றிய எங்கள் தல தோனியே. வெற்றி உன் மேல் கொண்ட காதல் எதையும் தாண்டி புனிதமானது. வெற்றி மகுடம் சூட காத்திருப்போர் மத்தியில் வெற்றிக்கு மகுடமாக எப்போதும் நீ சிங்கம்தான். இம்முறையும் கோப்பை சிஎஸ்கேவுக்கு தான்” எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 31, 2025
விஜய் + காங்கிரஸ்.. கூட்டணி முடிவாகிறது

காங்கிரஸுக்கு 25 சீட்டுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்ற முடிவில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே கேட்பதை கொடுக்காவிட்டால் திமுக கூட்டணியில் காங்., நீடிக்குமா என்பது சந்தேகம்தான் என பேசப்பட்டது. இதனால் தவெக உடன் காங்., மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இப்படியொரு தகவல் வெளியாகியுள்ளதால், தவெக-காங்., கூட்டணி முடிவாக வாய்ப்புள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News December 31, 2025
ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்!

RailOne செயலியில் முன்பதிவில்லா டிக்கெட் பெறுவோருக்கு 3% தள்ளுபடி அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. செயலி மூலம் டிக்கெட் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் ஜன.14 முதல் ஜூலை 14 வரை இச்சலுகை அமல்படுத்தப்பட உள்ளது. தற்போது RailOne செயலியில் R-wallet மூலம் டிக்கெட் பெற்றால் மட்டுமே 3% கேஷ்பேக் வழங்கப்படும் நிலையில், UPI, டெபிட் கார்டு உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் கட்டண முறைகளுக்கும் இனி தள்ளுபடி கிடைக்கும்.
News December 31, 2025
ஜன 6-ம் தேதி அமைச்சரவை கூட்டம்

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஜன.20-ல் தொடங்க உள்ளது. 2026 தேர்தலுக்கு முன்னதாக கூடும் கடைசி கூட்டத்தொடர் இது என்பதால், எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனவே இது தொடர்பாக ஆலோசனை நடத்த, ஜன.6-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. CM ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும், இடைக்கால பட்ஜெட் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


