News March 25, 2025
தூய நரையிலும் காதல் மலருதே… ❤️❤️

பெற்றோரை எதிர்த்து வாழ்க்கையைத் தொடங்கிய தம்பதி, 64 ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆச்சரியமாக இருக்கிறதா? குஜராத்தில் இருவேறு சமூகத்தை சேர்ந்த ஹர்ஸ், மிருது இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டனர். 64 ஆண்டுகளுக்கு பிறகு, குழந்தைகள், பேரக்குழந்தைகள் சேர்ந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஹர்ஸ் – மிருது தம்பதியின் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவை கலக்குகின்றன.
Similar News
News December 31, 2025
கண் பார்வையை கூர்மையாக்கும் உணவுகள்

உங்கள் கண் பார்வை கூர்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க சரியான ஊட்டச்சத்து தேவை. தூங்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் கண்கள் ஓயாமல் வேலை செய்கிறது. நவீன வாழ்க்கையில் இளம் வயதினர் பலரும் கண் பார்வை பாதிப்புக்கு ஆளாகின்றனர். இந்நிலையில், கண்கள் ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவுகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 31, 2025
2026-ல் இந்தியா, பாக்., இடையே போர்?

2026-ல் IND, PAK இடையே மோதல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக US-ஐ சேர்ந்த ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. இது PAK-ல் அதிகரிக்கும் பயங்கரவாத செயல்களால் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரும், பதட்டம் நிலவுவதற்கான காரணமாக கூறப்படுகிறது. இருநாடுகளும் ஆயுதக் குவிப்பை துரிதப்படுத்துவது கவலைக்குரிய விஷயம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News December 31, 2025
டிசம்பர் 31: வரலாற்றில் இன்று

*1600 – கிழக்கு இந்திய கம்பெனி தொடக்கம்
*1910 – நாடக கலைஞர் டி.எஸ்.துரைராஜ் பிறந்தநாள்
*1984 – ராஜீவ் காந்தி இந்திய பிரதமரானார்
*1989 – நடிகை பிரியா பவானி சங்கர் பிறந்தநாள்
*1999 – 3 தீவிரவாதிகள் விடுக்கப்பட்டதை அடுத்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814-ல் இருந்த 190 பணயக்கைதிகள் மீட்பு


