News March 17, 2024
ஒலிபெருக்கி பயன்படுத்த தடை

புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு ஏப்ரல் 19ஆம் தேதி (ம) வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி அன்றும் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் காலங்களில் ஒலிபெருக்கியின் பயன்பாடு அதிகமாக இருக்கும். எனவே புதுச்சேரி. காரைக்கால். மாகே. ஏணாம் போன்ற பகுதிகளில் இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை ஒலிப்பெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
Similar News
News December 20, 2025
புதுவை: போலீஸ் உடற்தகுதி தேர்வு தேதி அறிவிப்பு

புதுச்சேரி, காவல்துறையில் காலியாக உள்ள போலீஸ் பணியிடங்களை நேரடி நியமனத்தின் மூலம் நிரப்ப அறிவிப்பு ஆணை கடந்த ஆகஸ்டு 12-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 9,932 விண்ணப்பங்கள் ஏற்றுக்கப்பட்டன. இந்நிலையில் இதற்கான உடல் தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு வரும் ஜனவரி 2-ம் தேதி முதல் 12-ம் தேதி கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் நடக்க உள்ளது என காவல்துறை சிறப்பு பணி அதிகாரி ஏழுமலை தெரிவித்துள்ளார்.
News December 20, 2025
புதுவை: காசு வைத்து சூதாட்டம் – 9 பேர் கைது

உப்பளம் எக்ஸ்போ புதிய துறைமுக மைதானத்தில், சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, அங்கு சூது விளையாடியவர்களை பிடித்து விசாரித்ததில், முதலியார்பேட்டை சேர்ந்த ராஜி, வாணரப்பேட்டை சேர்ந்த அருள், பிரகாஷ், சத்தியமூர்த்தி, அற்புதராஜ், பாவாணர் நகர் தமிழ்மணி, ஆட்டுப்பட்டி முருகன், வம்பாகீரப்பாளையம் தர்மேந்திரன் சுரேஷ் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
News December 20, 2025
புதுவை: SIR பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

சமிபத்தில் SIR பணிகள் நிறைவுற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் புதுச்சேரியில் இருந்து 85,531 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்களது பெயர் SIR பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <


