News June 15, 2024
தாமரை தமிழகத்தில் மலராது: திருமாவளவன்

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று கூறியவர்களை காணவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மழைக்கால தவளை போல் கூவிக்கொண்டிருந்த அண்ணாமலை இப்போது எங்கே சென்றார்? என்று கேள்வி எழுப்பிய அவர், திராவிட இயக்க பூமியில் ஒருபோதும் பாஜக காலூன்ற முடியாது என்றார். திமுக அரசின் நலத்திட்டங்களுக்கு மக்கள் அளித்த மதிப்பெண்ணே, நாடாளுமன்ற தேர்தல் வெற்றி எனவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News November 13, 2025
International Roundup: பாலியல் குற்றவாளியுடன் டிரம்ப்

*ஈராக் தேர்தலில் தற்போதைய PM முகமது ஷியா அல்- சூடானி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு. *ரஷ்யாவை அமைதி பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வைக்க இன்னும் அதிக அழுத்தம் தர ஜி7 நாடுகள் முடிவு. *பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் டிரம்ப் இருந்த ஆவணங்களை ஜனநாயக கட்சி வெளியிட்டது. *குவாண்டம் கம்ப்யூட்டருக்கான சோதனை சிப்பை (LOON) கண்டுபிடித்துள்ளதாக IBM அறிவிப்பு. *சூடான் உள்நாட்டு போரை நிறுத்த ஐநா அழைப்பு.
News November 13, 2025
நவம்பர் 13: வரலாற்றில் இன்று

*1935 – பாடகி பி. சுசீலா பிறந்தநாள். *1947 – சோவியத் யூனியன் AK-47 துப்பாக்கியை வடிவமைத்தது. *1958 – எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பிறந்தநாள். *1984 – நடிகர் விக்ராந்த் பிறந்தநாள். *1985 – கொலம்பியாவில் எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஆர்மேரோ நகரம் அழிந்தது. 23,000 பேர் கொல்லப்பட்டனர். *1993 – இலங்கையின் ராணுவ கூட்டுத்தளங்களை தாக்கி, ராணுவ தளவாடங்களை விடுதலை புலிகள் கைப்பற்றினர்.
News November 13, 2025
PAK குண்டு வெடிப்பு: அச்சத்தில் இலங்கை வீரர்கள்

பாகிஸ்தானில் PAK vs SL ODI தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று அங்கு <<18263443>>கார் குண்டு வெடிப்பு<<>> நடந்ததால், இலங்கை வீரர்கள் கலக்கத்தில் உள்ளனர். அதனால், உடனே நாடு திரும்ப வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் முறையிட்டனர். ஆனால், அதை மறுத்த வாரியம், தொடர் முடியும் வரை அங்கேயே இருக்க ஆணையிட்டுள்ளது. பாதுகாப்பு வழங்குவதாக பாக்., கிரிக்கெட் வாரியம் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


