News February 9, 2025

2026ல் தமிழகத்திலும் தாமரை மலரும்: தமிழிசை

image

தலைநகரிலேயே தாமரை மலரும்போது, தமிழகத்திலும் 2026ல் தாமரை மலரும் என தமிழிசை செளந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஊழலை ஒழிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த கெஜ்ரிவால், ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு சென்றதாக விமர்சித்தார். மேலும், INDIA கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு திமுக கவலைப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Similar News

News February 9, 2025

தைப்பூசத்தில் பத்திரப் பதிவு அலுவலகத்தை திறக்க எதிர்ப்பு

image

தைப்பூச நாளில் பத்திரப் பதிவு அலுவலகங்களை திறக்கக்கூடாது என இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். பொது விடுமுறை என அறிவிக்கப்பட்ட தைப்பூச தினமான பிப்.11ம் தேதி பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அறிவித்துள்ளது. இந்து சமூக மக்களுக்கு விரோதமாகச் செயல்படும் திராவிட மாடல் அரசின் இந்த அறிவிப்பு உள்நோக்கம் கொண்டதாக உள்ளது என்று அவர் விமர்சித்துள்ளார்.

News February 9, 2025

பாஜக, AAP இடையே வாக்கு வித்தியாசம் இவ்வளவு தானா?

image

டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் 2%க்கும் குறைவாகவே உள்ளது. பாஜக 45.56%, ஆம் ஆத்மி 43.57% வாக்குகளும் பெற்றுள்ளன. ஆனால், தொகுதி வாரியாக 26 இடங்கள் வித்தியாசம் உள்ளது. பாஜக 48 தொகுதிகளையும், AAP 22 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன. பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற முதல் 3 வேட்பாளர்களும் AAPஐ சேர்ந்தவர்கள் ஆவர்.

News February 9, 2025

கூட்டுறவு வங்கிகளில் ₹1 லட்சம் கோடி கடன் இலக்கு

image

கூட்டுறவு வங்கிகளில் நடப்பு நிதியாண்டில் அனைத்து பிரிவுகளிலும் ₹1 லட்சம் கோடி கடன்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, நகைக்கடன், பயிர்க்கடன் என ₹85,000 கோடிக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. நிதியாண்டு முடிவடைய ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில், இலக்கை அடைவது கடினமாகியுள்ளது. தொடர்ந்து, மகளிர் குழு, கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பிரிவில் கூடுதல் கவனம் செலுத்தி இலக்கை அடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!