News September 28, 2024
ஜம்மு-காஷ்மீரில் தாமரை மலரும்: பிரதமர் மோடி

ஜம்மு-காஷ்மீரில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு MAM மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், ஊழல், பிரிவினைவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீரையே மக்கள் விரும்புவதாக கூறினார். 2 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 40 தொகுதிகளில் அக்.1ல் நடைபெறுகிறது. ஜம்முவில் 24 தொகுதிகள், காஷ்மீரில் 16 தொகுதிகளில் இந்த தேர்தல் நடைபெறுகிறது.
Similar News
News November 12, 2025
நிலவுக்கு பந்தயம்: வெல்லப்போவது யார்?

1969, ஜூலை 20-ல், நிலவில் முதல் முதலாக கால் பதித்தனர் USA விண்வெளி வீரர்கள். அரை நூற்றாண்டு கடந்து விட்ட நிலையில், 2030-க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப சீனா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேநேரம், சீனாவுக்கு முன் மீண்டும் நிலவில் கால் பதிக்க தயாராகி வருகிறது USA. ஆனால் USA-வின் முயற்சியில் தாமதங்கள் ஏற்பட்டு வருவதால், விண்வெளி பந்தயத்தில் வெல்லப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
News November 12, 2025
டெல்லி கார் வெடிப்பு: PM மோடி அவசர ஆலோசனை

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக PM மோடி தலைமையிலான அவசர அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. இதில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நாட்டின் பாதுகாப்பு, கார் வெடிப்பு வழக்கின் விசாரணை நிலை குறித்து PM மோடி கேட்டறிந்தார்.
News November 12, 2025
V-ல் ஆரம்பமாகும் அழகிய நகரங்கள்

இந்தியாவில் பல அழகிய நகரங்கள் உள்ளன. அதில், தனக்கென ஒரு கதை, தனித்துவமான அழகு மற்றும் கலாச்சார வசீகரத்தைக் கொண்டுள்ள சில நகரங்களின் பெயர்கள் ‘V’ என்ற எழுத்தில் தொடங்குகின்றன. அவை என்னென்ன நகரங்கள் என்று, மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களுக்கு மிகவும் பிடித்த நகரம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.


