News March 1, 2025
வீடு அல்லது நிலப் பத்திரம் தொலைந்து விட்டதா..?

அசல் சொத்து பத்திரம் தொலைந்து விட்டால்: FIR பதிவு செய்யுங்கள் *ஆங்கிலம், பிராந்திய மொழி நாளிதழில் விளம்பரம் கொடுக்கவும் *சொத்து பத்திரத்தின் நகலைப் பெற, பதிவாளர் அலுவலகத்தில் சொத்தின் விபரங்கள், FIR நகல், செய்தித்தாள் விளம்பர நகலை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்த சான்றிதழை நோட்டரி மூலம் சான்றளியுங்கள் *நகல் பெறுவதற்கான கட்டணத்தை அலுவலகத்தில் Deposit செய்யுங்கள்.
Similar News
News March 13, 2026
தேர்தலில் போட்டியிடமாட்டேன்: வைகோ

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிட மாட்டேன் என்று வைகோ தெரிவித்துள்ளார். இப்போது மட்டுமல்ல, ஒருகாலமும் பேரவைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் கூறியுள்ளார். பார்லிமென்ட்டில் மனநிறைவுடன் பணியாற்றி 1,300 முறை பேசியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிடும் மதிமுக, 3 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறது.
News March 13, 2026
திமுகவுக்காக முதல்முறை களத்தில் OPS

தென்மாவட்டங்களில் இன்று முதல் திமுகவுக்காக OPS தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிகளில் அவர் இன்று பரப்புரை மேற்கொள்கிறார். திமுகவில் இணைந்தபிறகு, அக்கட்சிக்காக முதல்முறையாக OPS வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளது கவனம் பெற்றுள்ளது. OPS-ஐக் கொண்டு தென்மாவட்டங்களில் குறிப்பிட்ட சமூக வாக்குகளை பெற திமுக திட்டமிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News March 13, 2026
ஒரே இரவில் மாற்றம்.. அதிமுக கூட்டணியில் இணைந்தார்

தென்மாவட்ட அரசியலில் செல்வாக்குள்ள அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. 90-களில் திமுக, அதிமுகவுக்கு எதிராக உருவெடுத்த டாக்டர் சேதுராமனுக்கு, தென்மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. நேற்று இரவு EPS-ஐ நேரில் சந்தித்த சேதுராமன், 2026 தேர்தலில் அதிமுகவுக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.


