News March 24, 2024
ரேஷன் அட்டை தொலைந்து விட்டதா? இனி ஈஸி

ரேஷன் கார்டுகள் தொலைந்துவிட்டால், ஆன்லைனில் பெறும் வசதியை உணவுத்துறை ஏற்படுத்தியுள்ளது. www.tnpds.gov.in-ல் “பயனாளர் நுழைவு” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, செல்போன் நம்பரை பதிவிட வேண்டும். பின் உங்கள் நம்பருக்கு வரும் ஓடிபி-யை பதிவு செய்து, ஸ்மார்ட் கார்டு பிரிண்ட்” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்து, Save என்ற ஆப்ஷனை தந்தால் போதும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு கிடைக்கும்.
Similar News
News February 4, 2026
BREAKING: தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி

கடந்த சில தினங்களாக தங்கம் விலை 15% வரை சரிந்ததால் பலரும் காயின்கள், பிஸ்கட்டுகளாக வாங்கி குவித்தனர். தற்போது விலை ஏற்றத்தில் இருப்பதால் சிலர் வங்கிகளில் நகைக் கடனாக பெற முயல்கின்றனர். ஆனால், RBI ரூல்ஸ் படி காயின்களுக்கு வங்கிகள் நகைக் கடன் வழங்குவதில்லை. இதனால் பலரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர். எனவே முதலீடு, வங்கிக் கடன் நோக்கில் தங்கம் வாங்குவோர் நகைகளாக வாங்குவதே சிறந்தது.
News February 4, 2026
இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த டாப் 10 வீடுகள்!

இந்தியாவின் பல முன்னணி தொழிலதிபர்கள் மிகப்பெரும் செலவில் அழகான, பிரமாண்டமான வீடுகளை கட்டியுள்ளனர். அவர்களில் யாரெல்லாம் மிகவும் விலையுயர்ந்த வீடுகளை வைத்துள்ளனர்? அந்த வீடுகள் எங்கு அமைந்துள்ளன? அவற்றின் மதிப்பு எவ்வளவு? இந்த தகவல்களை எல்லாம் மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொரு படமாக ஸ்வைப் செய்து பார்த்து விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். SHARE
News February 4, 2026
இந்திய சந்தையை US-க்கு வாடகைக்கு விட்டதா? சு.வெ.,

இந்திய-US வர்த்தக ஒப்பந்தத்தில் PM மோடி சரணாகதி அடைந்தார் என்பதை US செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளதாக MP சு.வெங்கடேசன் சாடியுள்ளார். ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் இருப்பதாக பியூஷ் கோயல் கூறும் நிலையில், அதற்கு மாறாக இந்தியா ஒப்புக்கொண்ட முடிவுகளை US அதிகாரி பட்டியலிடுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இந்தியாவின் நிர்வாகத்தை US-க்கு உள் வாடகைக்கு விட்டதா BJP எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.


