News October 23, 2025

ஒற்றை அறிவிப்பால் ₹13.15 லட்சம் கோடி இழப்பு

image

கூகுள் குரோமிற்கு மாற்றாக ‘சாட்ஜிபிடி அட்லஸ்’ எனும் Browser-ஐ OpenAI அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஒற்றை அறிவிப்பால் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet-ன் சந்தை மதிப்பு ₹13.15 லட்சம் கோடி சரிந்துள்ளது. முழுவதும் AI-ஆல் வடிவமைக்கப்பட்ட அதிநவீன Browser ஆக ‘சாட்ஜிபிடி அட்லஸ்’ இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, குரோமிற்கு போட்டிய ‘COMET’ Browser-ஐ Perplexity AI அறிமுகப்படுத்தியது.

Similar News

News October 23, 2025

சிரஞ்சீவியின் புகைப்படங்களை பயன்படுத்த தடை

image

பலர் தனது பெயர், போட்டோஸ் அனுமதியின்றி வணிக ரீதியாக பயன்படுத்துவதாக கூறி ஹைதராபாத் கோர்ட்டை நடிகர் சிரஞ்சீவி நாடியிருந்தார். மேலும் மீம்ஸ் மூலம் தனது பெயரை களங்கப்படுத்தும் செயல்கள் நடப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் சிரஞ்சீவியின் ஒப்புதல் இன்றி, அவரது போட்டோஸ், பெயர்., குரல் ஆகிய பயன்படுத்த தடை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

News October 23, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 23, ஐப்பசி 6 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்:10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: துவிதியை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: வளர்பிறை

News October 23, 2025

ஸ்மிருதி இரானி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பில்கேட்ஸ்

image

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி Kyunki Saas Bhi Kabhi Bahu Thi 2 என்ற சீரியலில் நடித்து வருகிறார். இதில் பில்கேட்ஸ் நடிக்க இருப்பதாக நம்ப தகுந்த தகவல் வெளியாகியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணுவதன் அவசியம் குறித்து அதில் பில்கேட்ஸ் வலியுறுத்தி இருப்பதாக தெரிகிறது. ஸ்மிருதிக்கும், பில்கேட்ஸுக்கும் இடையே நடக்கும் வீடியோ கால் உரையாடல் போன்று, இந்த காட்சி அமைய உள்ளதாம்.

error: Content is protected !!