News August 18, 2024

எடை குறைப்பு மட்டுமே சிறந்த நடிப்பு கிடையாது

image

தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நித்யா மேனனுக்கு அண்மையில் தேசிய விருது வழங்கப்பட்டது. நித்யா மேனனுக்கு விருது வழங்கப்பட்டதை வலைதளங்களில் சிலர் கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ள அவர், “சிறந்த நடிப்பு என்பது எடை குறைப்போ, அதிகரிப்போ கிடையாது. அது நடிப்பின் ஒரு பகுதி தான். இதை நிரூபிக்கவே முயற்சிக்கிறேன்” எனக் கூறினார்.

Similar News

News October 18, 2025

பிரின்சிபால் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பிய மாணவர்கள்

image

அந்த காலத்து 90ஸ் கிட்ஸ் தேர்வு எழுத பயந்துவிட்டு வயிறு வலி, காய்ச்சல் அடிப்பதாக கதைவிடுவார்கள். ஆனால், இன்றைய 2K கிட்ஸ் தேர்வை நிறுத்த பிரின்சிபால் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பும் அளவிற்கு துணிந்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் நடந்த இச்சம்பவத்தில், போலியான கல்லூரி அறிக்கையை தயாரித்த மாணவர்கள் அதை SM-ல் பரப்பியுள்ளனர். இதுதொடர்பாக 2 மாணவர்களிடம் போலீஸ் விசாரணை நடத்துகிறது.

News October 18, 2025

அமைச்சர் குடுகுடுப்பைக்காரன் போல் பேசக்கூடாது: அன்புமணி

image

TRB ராஜா அமைச்சரை போல பேச வேண்டும், மாறாக குடுகுடுப்பைக்காரரை போல பேசக்கூடாது என அன்புமணி விமர்சித்துள்ளார். ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளித்ததுபோல், முதலீடுகள் கண்டிப்பாக வரும் என மீண்டும் மீண்டும் சொல்லும் ராஜா, அது எப்போது வருமென சொல்லவில்லை எனவும் சாடியுள்ளார். மேலும் மக்களை ஏமாற்ற பொய்களை முதலீடு செய்யாமல், உண்மையாகவே முதலீடுகளை ஈர்க்க திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

News October 18, 2025

ராசி பலன்கள் (18.10.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!