News April 17, 2024

ராமரின் ஆசிர்வாதம் புதிய சக்தியை அளிக்கும்

image

தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் நமது முயற்சிக்கு, ராமரின் ஆசீர்வாதங்கள் புதிய சக்தியை அளிக்குமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராம நவமியை முன்னிட்டு தனது X பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ராம பிரானின் ஆசீர்வாதம் என்றும் நமக்கு கிடைக்கட்டும். நீதி மற்றும் அமைதியின் பாதையில் நம்மை வழி நடத்துவதுடன், நம் வாழ்வில் ஞானத்தையும், துணிவையும் பிரதிப்பலிக்கட்டுமென தெரிவித்துள்ளார்.

Similar News

News August 15, 2025

வரலாற்று சாதனை படைத்த ஸ்வேதா மேனன்

image

கேரள நடிகர் சங்கத் தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். 31 ஆண்டு கால நடிகர் சங்க வரலாற்றில், ஒரு நடிகை தலைவராக வெல்வது இதுவே முதல்முறையாகும். முன்னதாக, நிதி ஆதாயத்திற்காக ஆபாச திரைப்படங்களில் நடித்ததாக இவர் மீது சமீபத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து அவர் இடைக்கால தடை வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.

News August 15, 2025

தலையில் படுகாயம்.. 7 நாள்கள் போராடி உயிர் பிரிந்த சோகம்

image

நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் இன்று காலமானார். கடந்த 8-ம் தேதி அவரது வீட்டில் வழுக்கி விழுந்ததால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் ICU பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் குழுவினரின் கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில், இன்று மாலையில் அவர் உயிர் பிரிந்தது. RIP

News August 15, 2025

இல.கணேசன் கடந்து வந்த பாதை

image

தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்ட <<17417276>>இல.கணேசன்<<>>, தமிழ்நாட்டில் பாஜகவையும், தாமரை சின்னத்தையும் பட்டி, தொட்டியெங்கும் கொண்டு சென்றவர். தனது வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே RSS-ல் இணைந்தார். 80 வயதில் காலமான அவர், இதுவரை திருமணம் செய்து கொள்ளவே இல்லை. பாஜகவில் தேசிய, மாநில உயர் பொறுப்புகளை வகித்துள்ளார். பாஜகவில் இருந்தாலும், திமுக, அதிமுக கட்சிகளுடன் நட்புறவை பேணியவர். #RIP

error: Content is protected !!