News August 21, 2025

லிங்க வடிவில் காட்சி தரும் விநாயகர்!

image

திண்டிவனம், தீவனூர் பிள்ளையார் கோயிலில் விநாயகர் லிங்க வடிவில் காட்சி தருகிறார். பல நூறு ஆண்டுகளுக்கு முன், ஆடுமேய்க்கும் சிறுவர்கள் நெல் குத்த கல் தேடிய போது, யானைத்தலை வடிவில் ஒரு கல் கிடைத்தது. அது விநாயகர் போல் தெரிய, பிரதிஷ்டை செய்து வழிபட தொடங்கினர். பால் அபிஷேகம் செய்யும் போது லிங்கத்தில் படிந்திருக்கும் விநாயக வடிவைத் தரிசிக்கலாம். இக்கோயில் திருமண தடை நீக்கும் என நம்பப்படுகிறது.

Similar News

News January 23, 2026

சென்னை: ரேஷன் கார்டு உள்ளதா? மிஸ் பண்ண வேண்டாம்!

image

சென்னை மக்களே, உங்கள் ரேஷன் கார்டில் புதிய பெயர் சேர்த்தல் & நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், கைபேசி எண்ணை பதிவு செய்யவோ (அ) மாற்றம் செய்யவோ அலைய வேண்டாம். இதற்காக நாளை (ஜன.24) சென்னையிலுள்ள 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமானது காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News January 23, 2026

அமைச்சர் நேரு வழக்கில் அரசுக்கு கூடுதல் நெருக்கடி

image

அமைச்சர் கே.என்.நேரு மீதான ஆட்சேர்ப்பு ஊழல் தொடர்பான குற்றச்சாட்டில், FIR பதிவு செய்ய அதிமுக சார்பில் சென்னை HC-ல் <<18786820>>மனு தாக்கல்<<>> செய்யப்பட்டிருந்தது. இதை இன்று விசாரித்த கோர்ட் தமிழக அரசு வரும் 28-ம் தேதிக்குள் பதிலளிக்கவும், டிஜிபி வசம் ED அளித்துள்ள ஆதாரங்களை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதனால் திமுக அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

News January 23, 2026

திமுக என்றால் (CMC) ஊழல், மாபியா, கிரைம்: மோடி

image

2 முறை (2021,2024) ஆட்சி செய்ய வாய்ப்பளித்த மக்களுக்கு, திமுக நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது என்று மோடி குற்றம் சாட்டினார். தற்போது திமுகவை CMC என அழைக்கின்றனர். CMC என்றால் என்ன தெரியுமா! ஊழல், மாபியா, கிரைம் (Corruption, mafia, crime) ஆகியவற்றை ஆதரிக்கும் அரசாக திமுக இருக்கிறது. இதனால்தான், DMK + CMC-ஐ மண்ணோடு மண்ணாக கிள்ளி எறிய வேண்டும் என தமிழக மக்கள் தீர்மானம் செய்துவிட்டனர் என்றார்.

error: Content is protected !!