News March 23, 2025
மரணம் எப்படியெல்லாம் வருது பாருங்க!!

இதய நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கே ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட சரோஜினியை(55), மரணத்தின் பிடியில் இருந்து டாக்டர்கள் காப்பாற்றுகின்றனர். ஆனாலும், அவருக்கு மரணக்கயிறு, லிப்ட் கயிற்றின் ரூபத்தில் வந்துள்ளது. ஹாஸ்பிடலில் அவரை லிப்டில் அழைத்து சென்ற போது கயிறு அறுந்து, லிப்ட் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. இதில், சரோஜினி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சாவை வெல்லும் சக்தி மனிதனுக்கு இல்லையே!
Similar News
News March 24, 2025
திணறும் டெல்லி… கலக்கும் லக்னோ…!

LSG-க்கு எதிரான போட்டியில் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய DC அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. மெக்கர்க்(1), போரல்(0). ரிஸ்வி(4) என முக்கியமான வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் நடையை கட்டினர். மேலும், டூ பிளெஸ்ஸி (29) கேப்டன் அக்சர் (22) ஆகியோரும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். 7 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு DC 65 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
News March 24, 2025
அக்னிவீரராக வேண்டுமா? அப்போ உடனே இத பண்ணுங்க

அக்னிவீரர் ஆள்சேர்ப்பு குறித்து கோவை ராணுவ அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அக்னிவீரர் ஆட்சேர்ப்புக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் www.joinindianarmy.nic.in-ல் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஏப்ரல் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
News March 24, 2025
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

விக்கிரவாண்டி அருகே பாறை வெடிப்பில் உயிரிழந்த சிறுமி காயத்ரியின் (10) குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வாய்க்கால் வெட்டுவதற்காக பாறைக்கு வெடி வைத்தபோது சிதறிய கல் ஒன்று, அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமியின் தலையில் பட்டது. இந்த செய்தியை கேட்டு வருத்தமடைந்தேன் என்று கூறியிருக்கும் முதல்வர், சிறுமியின் குடும்பத்தினருக்கு ₹3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.