News August 15, 2024

‘வங்கதேசத்தை பாருங்கள்; சுதந்திரத்தின் அருமை தெரியும்’

image

உச்ச நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி சந்திரசூட் தேசியக் கொடியேற்றினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சுதந்திரத்தை இன்று நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். சுதந்திரம் இல்லாதபோதுதான், அதன் அருமை தெரியவரும். வங்கதேசத்தை பாருங்கள். அங்கு தற்போது நடப்பதுதான், சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகிறது எனக் கூறினார்.

Similar News

News December 9, 2025

புதுவையில் இன்று விஜய் பிரசாரம்

image

கரூர் துயரத்தை அடுத்து, முதல்முறையாக விஜய் இன்று புதுவையில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். கடந்த கால கசப்பான அனுபவங்களை தவிர்க்கும் பொருட்டு, இந்த முறை கடுமையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. கர்ப்பிணிகள், குழந்தையுடன் வரும் பெண்கள் நீங்கலாக 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை. QR கோடு வைத்திருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

News December 9, 2025

திருப்பரங்குன்றம் விவகாரம்: இன்று விசாரணை

image

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. தனி நீதிபதி G.R.சுவாமிநாதன் அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற கோர்ட் உத்தரவிட்டும் ஏற்றாததால், அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 9, 2025

அண்ணாமலையை ரகசியமாக சந்தித்தார்.. புதிய திருப்பம்

image

கோவையில் உள்ள தனது இல்லத்தில் TTV தினகரனுக்கு அண்ணாமலை நேற்று இரவு விருந்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, இருவரும் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. விருந்தின் நடுவே டெல்லியில் இருந்து போன் வந்ததால், அண்ணாமலை உடனடியாக புறப்பட்டு சென்றுள்ளாராம். டிடிவி கூட்டணி ஆப்சனை ஓப்பனாக வைத்திருக்கும் நிலையில், அண்ணாமலை உடனான சந்திப்பு சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

error: Content is protected !!