News April 14, 2024
ஐபிஎல் வரலாற்றில் மிக நீண்ட ஓவர்

லக்னோ பந்துவீச்சாளர் ஷமர் ஜோசப், கொல்கத்தா அணிக்கு எதிரான தனது அறிமுக போட்டியில் மோசமான சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். தன்னுடைய முதல் ஓவரிலேயே 10 பந்துகளை (0, L1, 4, 2, b1, nb, Wd, Wd4, nb, 6) வீசினார். இதன் மூலம், ஐபிஎல்லில் அறிமுகப் போட்டியின் முதல் ஓவரை மிக நீண்ட ஓவராக வீசிய பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையைப் படைத்தார். இன்றைய போட்டியில் 4 ஓவரை வீசிய அவர் 47 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
Similar News
News January 18, 2026
பெரியாரை திட்டி திட்டியே…. மாரி செல்வராஜ்

பெரியாரை திட்டுவதன் மூலம் ஒருவர் பெரிய சிந்தனையாளர் ஆக முடியாது என இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியுள்ளார். தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் அவருக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது. அப்போது, பெரியாரை படித்து விட்டு, அவரை திட்டி திட்டியே எளிதாக பிரபலமாகலாம். ஆனால் ஆசானை ஜெயிப்பது என்பது அவரிடம் இருந்து பாராட்டு பெறுவது தானே தவிர, அவரை குறைசொல்லி அல்ல எனவும் கூறியுள்ளார்.
News January 18, 2026
PM மோடியை வழிநடத்தும் தர்மம் : மோகன் பகவத்

தர்மத்தின் மூலமாகவே உலகின் விஸ்வகுருவாக இந்தியாவால் உருவெடுக்க முடியும் என மோகன் பகவத் கூறியுள்ளார். தர்மம் என்ற வாகனத்தில் பயணித்தால் யாருக்கும் விபத்து ஏற்படாது என்றும், அதே ஆற்றல் தான் தன்னை, PM மோடி மற்றும் பொதுமக்களை வழிநடத்துவதாக அவர் குறிப்பிட்டார். ஒரு நாடு மதச்சார்பின்மையாக இருக்கலாம், ஆனால் தர்மத்தை பின்பற்றாமல் வாழ முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News January 18, 2026
பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

‘Why human connection matters in a digital world’ என்ற தலைப்பில் 9 – 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கட்டுரை போட்டியை CBSE அறிவித்துள்ளது. இதில் தேசிய அளவில் வெற்றிபெறும் முதல் 3 மாணவர்களுக்கு பரிசுத் தொகையாக முறையே ₹50,000, ₹25,000 மற்றும் ₹10,000 வழங்கப்படும். மேலும், பிராந்திய அளவிலும் பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது பற்றி அறிய இங்கே <


