News June 25, 2024

தாயை காண நெடும் பயணம்

image

இந்திய வம்சாவளியான விராஜித் முங்கலே, லண்டனில் வசித்து வருகிறார். இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் வசித்து வரும் தாயைக் காண, லண்டனில் இருந்து 59 நாள்களில் 18,300 கி.மீ காரில் பயணம் செய்து இந்தியா வந்துள்ளார். பயணங்கள் மீதுள்ள ஈர்ப்பால் ஜெர்மனி, ரஷ்யா, சீனா உள்ளிட்ட16 நாடுகளை கடந்து அவர் வந்துள்ளார். ஒரு நாளைக்கு 400 முதல் 600 கி.மீ வரை பயணம் செய்ததாக கூறியுள்ளார்.

Similar News

News November 17, 2025

மதுரை: வாடகை வீட்டில் இருப்போர் கவனத்திற்கு.!

image

மதுரை மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000449, 9445000450, 8870678220) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News November 17, 2025

நாமக்கல் ரயில் பயணிகளின் கவனத்திற்கு !

image

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து நாளை (நவம்பர். 18) இரவு 8:45 மணிக்கு ஓசூர், பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு, மாண்டியா, மைசூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல 06238 இராமநாதபுரம்-மைசூர் ரயிலில் டிக்கெட்டுகள் கிடைக்கும். பொதுமக்கள் ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பின்படி முன்பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

News November 17, 2025

விஜய் கட்சியில் இருந்து விலகினர்

image

TN முழுவதும் நேற்று தவெக சார்பில் SIR-க்கு எதிராக போராட்டம் நடந்தது. காலையில் போராட்டம் நடந்த நிலையில், மாலையில் அக்கட்சியில் இருந்து விலகி பல இளைஞர்கள் திமுகவில் இணைந்துள்ளனர். அப்போது, தவெக உறுப்பினர் அட்டையை உடைத்தும், புஸ்ஸி ஆனந்துடன் எடுத்துக்கொண்ட போட்டோவை கிழித்தும் போட்டனர். இந்த வீடியோ டிரெண்ட் ஆன நிலையில், இது திமுகவின் அரசியல் நாடகம் என தவெகவினர் பதிலடி கொடுக்கின்றனர்.

error: Content is protected !!