News August 9, 2024
மாஸ் ஹீரோ அவதாரம் எடுக்கும் லோகேஷ் கனகராஜ்

மாநகரம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய், கமல் என பெரிய ஹீரோக்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்து நட்சத்திர இயக்குநராக மாறினார். ரஜினியை வைத்து கூலி திரைப்படத்தை தற்போது அவர் இயக்கி வருகிறார். இந்நிலையில், சூரரைப்போற்று புகழ் சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். இதுதொடர்பாக அவருடன் படக்குழுவினர் பேசி வருவதாக தெரிகிறது.
Similar News
News November 12, 2025
30 ஆண்டுகளில் இயற்கை பேரிடர்களால் 80,000 பேர் பலி

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் இயற்கை பேரிடர்களால் 80,000 பேர் பலியானதாக ‘The Climate Risk Index’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ள நிலையில், டொமினிகா, மியான்மர், ஹோண்டுராஸ் ஆகிய நாடுகள் முதல் 3 இடத்தில் உள்ளன. மேலும், 1995 முதல் 430 பேரழிவுகளால் 130 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
News November 12, 2025
‘தற்குறி’ என சொல்லாதீங்க: எழிலன்

ஒரு சாராரை ‘தற்குறி’ என திமுகவினர் விமர்சிக்கின்றனர். இந்நிலையில், ‘தற்குறிகள்’ என விமர்சனம் செய்வது தவறான அணுகுமுறை என்று திமுக MLA எழிலன் தெரிவித்துள்ளார். நாம் அவர்களிடம் அரசியல் ரீதியாக பேசவில்லை, உரையாடவில்லை; அது நம்முடைய தவறு என்று கூறினார். மேலும், அவர்கள் சங்கிகள் கிடையாது; அவர்களிடம் அரசியல் ரீதியாக பேசினால்தான் போலியான தலைவர்களைப் பற்றி உணர்வார்கள் எனவும் ஆலோசனை வழங்கினார்.
News November 12, 2025
CSK அணி 6 வீரர்களை கழட்டி விட திட்டம்

நவம்பர் 15-ம் தேதிக்குள் IPL அணிகள் தக்கவைப்படும் வீரர்களின் பட்டியலை அறிவிக்க வேண்டும். இதனால் அந்த பட்டியலை தயார் செய்யும் பணியில் அனைத்து அணிகளும் தீவிரமாக உள்ளன. இதனிடையே CSK அணி டிரேட் மூலம் சஞ்சுவை வாங்க உள்ள நிலையில், 6 வீரர்களை அணியில் இருந்து விடுவிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, கான்வே, திரிபாதி, ஹூடா, ராமகிருஷ்ண கோஷ், குர்ஜப்னீத் உள்ளிட்டோரை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


