News April 22, 2025

சமூக வலைதளங்களுக்கு கும்பிடு போட்ட லோகேஷ்

image

விஜய், கமலை தொடர்ந்து ரஜினியுடன் கூலி படத்தில் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. கூலி படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. இதனிடையே சமூக வலைதளங்களில் இருந்து கொஞ்ச நாள்களுக்கு விலகி இருக்க உள்ளதாக லோகேஷ் தெரிவித்துள்ளார். கூலி படத்தின் புரோமோஷனின் போது மீண்டும் வருவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News April 22, 2025

முதல் அதிபரின் மனைவி காலமானார்

image

சிங்கப்பூரின் முதல் அதிபர் யூசப் ஈஷாக்கின் மனைவி புவான் நூர் ஆயிஷா முகமது சலிம் (91), வயது மூப்பு காரணமாக காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1959 முதல் 1970 வரை சிங்கப்பூரின் அதிபராக இருந்தவர் யூசப். சிங்கப்பூரை கட்டியமைக்க அஸ்திவாரமிட்ட யூசப்புக்கு துணையாக இருந்ததுடன், பல்வேறு சமூகப் பணிகளிலும் புவான் ஈடுபட்டார். அவரை கெளரவிக்கும் விதமாக அரசு மரியாதையும் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

News April 22, 2025

ஜேடி வான்ஸ் சொன்ன செய்தி.. இந்தியாவிற்கு சாதகம்?

image

அமெரிக்கா- இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தின் வரைவை இருநாடுகளும் இறுதி செய்துவிட்டதாக USA துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய நலன்களுக்காக பிரதமர் மோடியின் அரசாங்கம் கடுமையாக பேரம் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரே, அது இந்தியாவிற்கு சாதகமாக இருக்குமா என்பது தெரியவரும்.

News April 22, 2025

நீதிக்கட்சிக்கு முடிவே கிடையாது: ஸ்டாலின்

image

சென்னையில் நடைபெற்ற, ‘தமிழவேள் பி.டி.ராஜன் வாழ்வே வரலாறு’ நூல் வெளியீட்டு விழாவில் CM ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர், நீதிக்கட்சிக்கு முடிவே கிடையாது, அக்கட்சியின் நீட்சிதான் இந்த ஆட்சி என்று பெருமைப்பட பேசினார். தற்போதைய அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் தாத்தாவான பி.டி.ராஜன், நீதிக்கட்சியின் கடைசி தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!