News October 30, 2025

வெங்கட் பிரபு & SK படத்தில் இணையும் ‘லோகா’ நடிகை!

image

நடிகர் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவுடன் இணைய உள்ளார். Time Travel கதைக்களத்தில் இந்த படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தில் SK-வுக்கு ஜோடியாக ‘லோகா’ நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஜோடி ஏற்கெனவே ‘ஹீரோ’ படத்தில் நடித்திருந்த நிலையில், மீண்டும் இணைய உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News October 30, 2025

அணு ஆயுத போருக்கு ரெடி: டிரம்ப் சூசகம்!

image

ரஷ்யா சமீபத்தில் 2 அணுசக்தி ஆயுதங்களை சோதித்தது. இந்நிலையில், அணு ஆயுத சோதனைகளை தொடங்குமாறு, USA போர் துறைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். பிற நாடுகளின் அணு ஆயுத சோதனைகளால் தான் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டதாக கூறிய அவர், உலகின் வேறு எந்த நாட்டையும் விட USA-விடம் அதிக அணு ஆயுதங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சோதனைகளை நிறுத்திவிட்டு, உக்ரைன் போரை முடிக்குமாறும் புதினுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

News October 30, 2025

இவர்களை வாக்காளர்களாக சேர்க்கக்கூடாது: ரகுபதி

image

SIR பணிகள் நவம்பரில் தொடங்க உள்ள நிலையில், அதை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்திற்கு புலம்பெயர்ந்து வந்து, நிரந்தரமாக இருக்க முடியாதவர்களை வாக்காளர்களாக சேர்க்கக்கூடாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். பிஹார், மே.வங்கம், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்து, வேலை பார்ப்பவர்களுக்கு, TN-ன் அரசியல் சூழல் தெரியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

News October 30, 2025

சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹1000 குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தை போன்றே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் ₹1 குறைந்து ₹165-க்கும், கிலோவுக்கு ₹1000 குறைந்து ₹1,65,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த 10 நாள்களில் மட்டும் வெள்ளி விலை ₹17,000 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து, வரும் நாள்களிலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக நகை கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!